[X] Close

பன்றிகள் பறக்க ஆசைப்படுகிறார் - கம்பீர் கிண்டல்: ‘தம்பி’ உனக்குத் தெரிஞ்சத மட்டும் பேசு- ஓமர் அப்துல்லா பதிலடி


  • kamadenu
  • Posted: 02 Apr, 2019 18:22 pm
  • அ+ அ-

பாஜகவில் சமீபத்தில் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 35-ஏ குறித்து ஓமர் அப்துல்லாவை முன்வைத்து கிண்டலாகப் பேச அதற்கு ஓமர் அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார்.

 

சட்டப்பிரிவு 35-ஏவில் ஏதாவது விளையாட நினைத்தால் ஜம்மு காஷ்மீருக்கு தனி பிரதமர், தனி குடியரசுத்தலைவர் முன்னிலைக்கு வரும் என்று கிண்டலடித்துள்ளார்.

 

அதாவது சட்டப்பிரிவு 35ஏ என்பது ஜம்மு காஷ்மீரின் நிரந்தர குடியிருப்போர் யார் இவர்களின் சிறப்பு நில உரிமை தகுதி பற்றியதை மாநில அரசே தீர்மானித்துக் கொள்ள அதிகாரம் வழங்கும் ஒரு ஷரத்து ஆகும்.

 

இந்நிலையில் கவுதம் கம்பீர் தன் ட்வீட்டில், “ஓமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீருக்கு தனிப் பிரதமரை விரும்புகிறார், நான் கடல்களில் நடக்க விரும்புகிறேன்! ஓமர் அப்துல்லா காஷ்மீருக்கு தனியான பிரதமர் வேண்டும் என்று விரும்புகிறார், நான் பன்றிகள் பறக்க ஆசைப்படுகிறேன்! தனியான பிரதமர் என்பதை விடவும் ஓமர் அப்துல்லாவுக்கு இப்போது தேவை நல்ல ஸ்ட்ராங் காஃபி, அதன் பிறகு நல்ல தூக்கம்! இதன் பிறகும் கூட ஓமர் அப்துல்லா புரிந்து கொள்ளவில்லையெனில் பாகிஸ்தான் பச்சைப் பாஸ்போர்ட்தான்” என்று கடும் கேலி செய்துள்ளார்.

 

ஆனால் இதற்கு ஓமர் அப்துல்லாவும் மிகவும் கிண்டலாக, “கவுதம் நான் அதிகம் கிரிக்கெட் ஆடியதில்லை, காரணம் அதில் நான் சிறந்தவனல்ல என்பது எனக்குத் தெரியும்.  அதே போல் ஜம்மு காஷ்மீர் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது, அதன் வரலாறோ அதனை வடிவமைத்ததில் தேசிய மாநாட்டின் பங்கையோ நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். ஆனாலும் நீங்கள் உங்கள் அறியாமையை வெளிப்படுத்துகிறீர்கள். அனைவரும் பார்க்கும்படியாக உங்கள் அறியாமையை வெளிப்படுத்தியுள்ளீர்கள். உங்களுக்குத் தெரிந்தவற்றுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ஐபிஎல் பற்றி ட்வீட் போடுங்கள்” என்று சாடியுள்ளார்.

 

ஜம்மு காஷ்மீருக்குத் தனிப்பிரதமர் என்ற ஓமர் அப்துல்லாவின் பேச்சை முதலில் எதிர்த்தவர் பிரதமர் மோடி, ஹைதராபாத் கூட்டம் ஒன்றில் மோடி பேசிய போது, “கெடிகாரத்தைப் பின்னோக்கி கொண்டு செல்லப் பார்க்கிறார் ஓமர், 1953க்கு முந்தைய நிலைமைகளை விரும்புகிறார். இந்தியாவுக்கு 2 பிரதமர் கோருகிறார். காஷ்மீருக்கு தனி பிரதமர் என்கிறார். இப்படிக் கூற என்ன தைரியம்? மோடி இருக்கும் வரை இந்தியாவை யாரும் பிரிக்க முடியாது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close