[X] Close

பாஜகவின் ரஃபேல் போர் விமான ஊழலை விசாரிப்போம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை


  • kamadenu
  • Posted: 02 Apr, 2019 17:23 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பாஜக ஆட்சியில் செய்யப்பட்ட ரஃபேல் போர் விமான ஊழல், உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களை நாங்கள் விசாரிப்போம், ஊழல்தடுப்புச் சட்டங்கள் பாகுபாடின்றி அமல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இருந்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது.

அதில் பாஜக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் செய்யப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் குறிப்பாக ரஃபேல் போர்விமான ஊழல், உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை ரூ. 58 ஆயிரம் கோடியில்  வாங்குவதற்கு பிரதமர் மோடி செய்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

விமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஒப்பந்தத்தை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு வழங்காமல் அனில் அம்பானி நிறுவனத்துக்கு மத்திய அரசு  வழங்கியது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். ஆனால், இதை பாஜகவும், மத்திய அரசும் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் ரஃபேல் போர் விமான ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், பாஜகவின் கடந்த 5ஆண்டு ஆட்சியில் நடந்த பல்வேறு ஒப்பந்தங்கள், ஒப்பந்தங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும். ஊழல் செய்தவர்கள் மீது எந்தவிதமான பாரபட்சமும் இன்றி ஊழல் தடுப்புச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

 நாட்டில் ஊழல் செய்த பல தொழிலதிபர்கள் எந்த சூழலில் நாட்டை விட்டு தப்பித்து சென்றார்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு, அவர்களை இந்தியா கொண்டு வர நவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் மீது நீதிவிசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close