[X] Close

மீனவர்களை அவமதித்த காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்: பாஜக, மார்க்சிஸ்ட் கண்டனம்


  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 07:20 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர், திருவனந்தபுரம் மக்களவை தொகுதியின் உறுப்பினராக உள்ளார். வரும் தேர்தலில் அதே தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மீன் சந்தைக்கு சமீபத்தில் சென்ற அவர், அங்கு மீன் விற்கும் பெண்களிடம் பேசினார். சைவமான அவர், இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

மேலும், “மீன் சந்தைக்கு சென்றபோது குமட்டல் ஏற்பட்டாலும், அங்கு உற்சாகமான மனநிலையைக் காண முடிந்தது” என பதிவிட்டிருந்தார். இதையடுத்து, சசி தரூர் மீனவர்களை இழிவுபடுத்திவிட்டதாகவும் அவர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் சசி தரூரைக் கண்டித்து கொச்சி, கொல்லம் மற்றும் கோழிக்கோடு உள்ளிட்ட நகரங்களில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாஜக வேட்பாளர் கும்மணம் ராஜசேகரன் கூறும்போது, “கடந்த ஆண்டு கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, ஏராளமானவர்களை மீனவர்கள் காப்பாற்றினர். இந்நிலையில், சமூக வலைதளத்தில் சசி தரூர் பதிவிட்ட கருத்து மீனவர்களை அவமதிக்கும் வகையில் உள்ளது. இதற்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும்” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close