[X] Close

இடைநிற்றல், மாற்றுத்திறனாளிகள் உட்பட பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய வீடு வீடாக ஆய்வு: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்


  • kamadenu
  • Posted: 02 May, 2019 07:51 am
  • அ+ அ-

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற அனுமதி வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதற்கு சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் அதன் மூலம் அவர் நடத்தி வரும் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் பணம் பரிமாறப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறையும் சிபிஐயும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன. ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. 24 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபரில் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. இதில் பிரிட்டன், ஸ்பெயினில் உள்ள சொத்துகளும் அடங்கும்.

இதைத் தொடர்ந்து தற்போது கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22.28 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில்தமிழகத்தின் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். இதற்கான பிரச்சாரத்தில் அவர் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அவரது சொத்துகள் முடக்கப்பட்டிருப்பது பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கிலும் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் வரும் ஏப்ரல் 26-ம் தேதி வரை இருவரையும் கைது செய்யக்கூடாது என்று டெல்லி சிபிஐ நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close