[X] Close

உ.பி.யில் ராகுல், பிரியங்கா இணைந்து 18 பிரச்சாரக் கூட்டங்கள்


18

  • kamadenu
  • Posted: 29 Mar, 2019 19:13 pm
  • அ+ அ-

-ஆர்.ஷபிமுன்னா

உ.பி.யில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பொதுச்செயலாளர் பிரியங்கா வத்ராவும் இணைந்து 18 பிரச்சாரக் கூட்டங்கள் பேசுகின்றனர். இவர்களுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும் சில கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.

 

உபியின் 80 தொகுதிகளில் காங்கிரஸ் சில சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறது. இக்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை தற்போது பிரியங்கா மட்டும் செய்து வருகிறார்.

 

இன்னும் ஓரிரு நாட்களில் உபியின் முக்கிய நகரங்களில் 18 கூட்டங்களை ராகுலுடன் பிரியங்கா இணைந்து செய்ய உள்ளார். இந்த இடங்கள் இன்னும் ஓரிரு தினங்களில் முடிவாக உள்ளன.

 

இந்த கூட்டங்களில் உபியின் அங்கன்வாடிகள், மதரஸாக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் கரும்பு விவசாயிகள் பிரச்சனை ஆகியவற்றை காங்கிரஸ் தலைவர்கள் எழுப்ப உள்ளனர்.

 

பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் லக்னோ ஆகிய தொகுதிகளில் பிரம்மாணடமாக கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

இவர்கள் பிரச்சாரக் கூட்டங்களில் பட்டியலில் உபியின் முக்கிய நகரங்களான அலகாபாத், கான்பூர், சஹரான்பூர், அலிகர், மீரட், பரேலி, காஜியாபாத், கோரக்பூர், பிரதாப்கர், ஜான்சி மற்றும் பைஸாபாத் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close