[X] Close

கங்கை தூய்மை, கறுப்புப் பண மீட்பு வாக்குறுதிகள் என்னவாயிற்று?- பிரதமர் மோடிக்கு சரத்பவார் கேள்வி


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 12:28 pm
  • அ+ அ-

ரிஷபன்

வாடகை வீட்ல குடியிருந்த நேரம். குறிப்பிட்ட இடைவெளியில வான்ட்டடாய் வந்து குதிக்கும் ஓனர் என்னைப் பார்த்து மூக்கால அழுதுட்டுப் போவார். "எல்லாச் செலவும் ஏறுது... கட்டுப்படியே ஆவல" என்று. அடுத்த மாசம் வாடகை அதுவாவே ஏறிடும். “உங்கள மாதிரி இளிச்சவாயனை நான் பார்த்ததே இல்ல” என்று சகதர்மிணி இடித்துக் காட்டுவாள். ஒரு நாள் என் நண்பர் வீட்டுக்கு வந்தார். “எவ்ளோ நாளைக்குத்தான் இப்டி சிரமப்படுவ... கடன வாங்கி வீடு வாங்கிரு. காலி பண்ண வேண்டிய அவசியமே இல்ல. ஓனர் பயமும் இல்ல” என்று ஆசைவார்த்தை காட்டி அவரே ஒரு இடத்துக்குக் கூட்டியும் போனார்.

அது பட்டப்பகல் நேரம். தெருவே வெறிச்சோடிக் கெடந்துச்சு. “பார்த்தியா... ஆளே இல்ல. சுத்தமா இருக்கு” என்று ஏற்றி விட்டார். ரெண்டாவது மாடியில ஃப்ளாட். பன்மாடிக் குடியிருப்பு. தெருவைப் பார்த்த வாசல். “நல்லா இருக்குங்க” என்றாள் மனைவி. “இங்கே ஃப்ரிட்ஜ் வைக்கலாம்... இங்கே வாஷிங் மெஷின்... இந்த ஹால் மூலையில என்ன வைக்கலாம்?” என்று, இன்னும் வாங்காத வீட்டுக்கு அப்போதே அவள் இடம் பிடிக்க ஆரம்பிச்சுட்டா.

அப்புறமென்ன... பேங்க்ல லோன் போட்டு குடி போயாச்சு. விடிகாலை. நல்ல தூக்கத்துல ‘ஹம்மா... ஹம்மா’னு யாரோ கூப்பிடுற மாதிரி குரல். நல்லா காத்து வரும்கிறதால பால்கனிப் பக்கத்து ரூம்லதான் எல்லாரும் படுத்துருந்தோம். கதவைத் திறந்துக்கிட்டு பால்கனிக்கு வந்து எட்டிப் பார்த்தேன். நேர் எதிர் வீட்டு வாசல்ல வாட்டசாட்டமா ஒரு எருமை மாடு! மணி நாலு. மாட்டுக்காரர் பாலைக் கறந்துட்டு மாட்ட விட்டுட்டுப் போயிட்டார். அந்த மாடுதான் என்னோட தூக்கத்த துவம்சம் பண்ணிருக்கு. என் தூக்கத்துக்கு வேட்டு வெச்சுட்டு அழகா நடந்து வந்து எங்க அபார்ட்மென்ட் வாசல்ல சொகமா படுத்துருச்சு. சிமென்டு தரை நல்லா இதமா இருந்திருக்கும் போல... அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு வாட்டி ‘ஹம்மா...’ கச்சேரி நடத்துச்சு. விடியுற வரைக்கும் கச்சேரி ஓயல!

காலையில ஷெட்லருந்து பைக்கை எடுத்துக்கிட்டு வெளியில வந்தா... நடு வாசல்ல, காம்பஸே இல்லாம வட்டம் போட்டு கழிஞ்சிருந்துச்சு அந்த எரும மாடு! கூட்டிப் பெருக்க வர்ற பெண்மணி ரெண்டொரு நாள் வழிச்சுப் போட்டுச்சு. அப்புறம் அலுத்துப் போயி, “ தெனம் இப்புடி கழிஞ்சா எவ எடுத்துப் போடுவா?” என்று சொல்லி அதை அப்படியே போட்டுட்டு, அதச் சுத்தி தண்ணிய தெளிச்சு புது டிசைனா கோலத்த போட ஆரம்பிச்சுருச்சு அந்தம்மா.

அந்த ஏரியாவுல தினம் இதே பிரச்சினைதானாம்! அங்கிருந்த வட்டங்களை சுட்டிக்காட்டி, “இது முந்தா நாள்... இது போன வாரம்”னு தேதி வாரியா விளக்கம் குடுத்தாங்க மத்த குடியிருப்புவாசிங்க. விட்டா ஸ்டிக்கர் ஒட்டி வெச்சிருவாங்க போல!

பால்காரர் நாலு மணிக்கெல்லாம் பால் கறந்துட்டுப் போனதும் மிஸ்டர் எருமையண்ணன் காலைக் கடனை கழிக்க எங்க அபார்ட்மென்ட்டுக்கு டாண்னு வந்துருவாரு. வந்த வேலை முடிஞ்சிருச்சுன்னா வீதிகள்ல வாக்கிங் போவார். காய்கறி மார்க்கெட் வழியா போறதால காலை டிபன் அவருக்கு கிட்டத்தட்ட ஓகே ஆகிடும். அப்டி இல்லாட்டா, இருக்கவே இருக்கு போஸ்டர்.

பால்காரர் மகா முரடனா இருந்தாரு. “என்னங்கய்யா உங்க மாடு தெனம் இப்புடி அழிச்சாட்டியம் பண்ணுது”னு சொன்னதுக்கு, “அது என்னோட மாடே இல்லை”னு தலையில அடிச்சு சத்தியம் பண்ணுனாரு. அந்தத் தெருவுல இன்னும் நாலஞ்சு பால்காரங்க; எல்லார் வீட்டு எருமைகளும் ஒரே மாதிரி இருக்குமாம். எல்லாரும் தூங்குறப்ப நடக்கிற இந்த அநியாயத்துக்கு யாரை சாட்சிக்குக் கூப்பிட!

போனா போகுது, அந்தச் சாணியாவது சாலிடா இருந்தா பரவாயில்ல; அடுத்தாளுக்குத் தெரியாம நானே வழிச்சுப் போட்டுருவேன். ஆனா, லிக்விட் சாணியா போட்டா என்னதான் பண்றது?

இந்த வீட்டை எங்களுக்குக் காட்டுன அருமைத் தோழன்கிட்ட இந்த விஷயத்தை எல்லாம் அழாத குறையா சொன்னேன். அந்த மனுசன் அலட்டிக்காம சொன்னார். “பாக்கெட் பால் வாங்கறத நிறுத்து. அந்தப் பால்காரர் பசுமாடும் வச்சிருக்காராம். எருமைப்பாலோ, பசும்பாலோ... அவருக்கிட்ட பால் வாங்கறதா சொல்லு, ஃப்ரெண்ட்  ஆகிருவாரு. அப்புறம் நைசா உன்னோட கோரிக்கைய வையி. பாலைக் கறந்ததும் மாட்டைத் தெருவுக்கு அந்தப் பக்கமா ஓட்டி விட்டுரச் சொல்லு. பிரச்சினை தீர்ந்துரும்”னு நண்பர் சொன்னார். நான் அவரைப் பரிதாபமா பார்த்தேன். “வீடு பார்த்தியா... இவ்ளோ சல்லிசான ரேட்டுக்கு வீடு கெடைக்குமா? வீட்டுக்குள்ள உனக்கு ஏதாச்சும் பிரச்சினை இருக்கா... இல்லைல. உன்ன மாதிரி இன்னும் எத்தன பேரு இங்க குடி இருக்காங்க. அவங்கல்லாம் சகிச்சுக்கல” என்று புத்திமதி சொல்லி என்னை மடக்கினார் நண்பர்.

ஒரு வகையில அவரு சொன்னதும் நல்ல ஐடியாவாதான் தோணுச்சு. தாமதிக்காம பால்காரர் வீட்டுக்குப் போனேன். சிரிப்பே வராட்டிப் போனாலும் வாய் நிறைய சிரிச்சேன். ”எங்க வீட்டுக்குப் பால் ஊத்தறிங்களா?”னு கேட்டு ஆள ஃபிக்ஸ் பண்ணுனேன். “புதுசா குடி வந்திருக்கீங்களா”ன்னாரு. “இல்ல... சொந்தமா வாங்கிட்டேன்”னு சொன்னேன். அதைக் கேட்டதும் பால்காரர் என் கையப்பிடிச்சு குலுக்குனாரு. அவரு குலுக்குன குலுக்குல வெரல்ல ரத்தமே கட்டி நின்னிருச்சு. மாடுக பாவம்... அவருக்கிட்ட தெனமும் என்ன பாடுபடுதோனு எனக்குள்ள நெனச்சுக்கிட்டு அன்னைக்கி ராத்திரி நிம்மதியா தூங்கப் போனேன்

விடிகாலையில... ஹம்மா சவுண்டு இன்னும் பக்கத்துல கேட்டுச்சு. பதறியடிச்சு வாசலுக்கு ஓடுனேன். வாசல்ல மாடு இல்ல. ஆனா, ஹம்மிங் மட்டும் வந்துட்டே இருந்துச்சு. கதவைத் தெறந்துக்கிட்டு வெளியில வந்தா... அபார்ட்மென்ட் நடைபாதையில மாட்டை நிப்பாட்டி கறந்துட்டு இருந்தாரு பால்கார அண்ணாச்சி. என்னைய பார்த்ததும் அத்தன பல்லும் தெரியுறாப்புல சிரிச்சவரு, “அப்டியே குளுப்பாட்டி விட்டுட்டுப் போயிருவேன். காவேரில தண்ணி வரலியேன்னு கவலையா இருந்துச்சு. அய்யா இதுக்கே ஓனர்னு சொல்லவும் நிம்மதியாப் போச்சு’’ என்றபடி அபார்ட்மென்ட் பொதுக்குழாயில டியூபை மாட்டி மாட்டக் குளிப்பாட்ட ஆரம்பிச்சுட்டாரு!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close