[X] Close

காங்கிரஸின் அறிவிப்பு ஏமாற்று வேலை: முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 27 Mar, 2019 07:52 am
  • அ+ அ-

காங்கிரஸின் குறைந்தபட்ச அடிப்படை வருமான உறுதித் திட்டம் ஏமாற்று வேலை என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கப்படும் என்று அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் நேற்று பிரச்சாரம் செய்த முதல்வர் யோகி ஆதித்யநாத் இதுகுறித்து கூறியதாவது:காங்கிரஸின் குறைந்தபட்ச அடிப்படை வருமான உறுதித் திட்டம் ஏமாற்றுவேலை. இதுபோல பல்வேறு ஏமாற்று அறிவிப்புகளை காங்கிரஸ் ஏற்கெனவே வெளியிட்டிருக்கிறது. இதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இடையூறாக உள்ளன. ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் கோயில்களில், தொழுகை நடத்தும் வகையில் அமர்கின்றனர். தீவிரவாதிகளுக்கு காங்கிரஸ் கட்சி பிரியாணி பரிமாறுகிறது. பாஜக வெடிகுண்டுகளை வாயில் திணிக்கிறது.

உத்தரபிரதேசத்தில் கடந்த கால அரசுகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டால் தற்போதைய பாஜக அரசு 2 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close