[X] Close

பாஜக முன்னாள் தலைவர் கன்ஷியாம் காங்கிரஸில் இணைந்தார்


  • kamadenu
  • Posted: 27 Mar, 2019 07:53 am
  • அ+ அ-

ராஜஸ்தானில் பாஜக முன்னாள் தலைவர் கன்ஷியாம் திவாரி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் தொண்டர்களை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நேற்று சந்தித்தார். அப்போது ராகுல் முன்னிலையில் கன்ஷியாம் திவாரி, காங்கிரஸில் இணைந்தார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஜனநாயக கோட்பாடுகளை பாதுகாக்க காங்கிரஸில் இணைவது அவசியம் என கருதுகிறேன். வரும் மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்” என்றார்.

ராஜஸ்தானில் கடந்த 2017-ல் பாஜக தலைவரும் அப்போதைய முதல்வருமான வசுந்தரா ராஜேவுக்கு எதிராக அமைப்பு ஒன்றை கன்ஷியாம் திவாரி தொடங்கினார். ராஜேவை வெளிப்படையாக விமர்சித்த அவர், அவருக்கு எதிராக ஊழல் புகார்களை கூறினார். ராஜேவுக்கு எதிராக கட்சித் தலைமையிடமும் பலமுறை புகார் அளித்துள்ளார். பிறகு கடந்த ஆண்டு ஜூனில் பாஜகவை விட்டு விலகினார்.

கடந்த ஆண்டு ராஜஸ்தான் தேர்தலுக்கு முன் பாரத் வாகினி கட்சியை அவர் தொடங்கினார். தேர்தலில் சங்கனேர் தொகுதியில் போட்டியிட்ட அவர் படுதோல்வி அடைந்தார். இந்நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close