[X] Close

கவலையளிக்கும் சேப்பாக்கம் பிட்ச்: தோனியின் களவியூகத்தில் சரிந்த தினேஷ் கார்த்திக் அணி: வெற்றிநடையில் சிஎஸ்கே


  • kamadenu
  • Posted: 10 Apr, 2019 07:33 am
  • அ+ அ-

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து சிஆர்பிஎப் வீரர்களின் பாதுகாப்பை மேம்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதுதொடர்பாக சிஆர்பிஎப் படையின் தலைவர் ஆர்.ஆர்.பட்னாகர், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பேருந்துகளில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎப் வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்ள கண்ணிவெடி தாக்குதலால் பாதிக்கப்படாத வாகனங்களை சிஆர்பிஎப் ஏற்கெனவே பயன்படுத்தி வருகிறது.

இந்த வகை வாகனங்களை கூடுதலாக வாங்க திட்டமிட்டுள்ளோம். சிஆர்பிஎப் பயன்படுத்தும் பேருந்தில் 57 வீரர்கள் வரை பயணம் செய்ய முடியும். இதுபோன்ற பெரிய பேருந்துகளில் பாதுகாப்பு வசதிகளை செய்வது கடினம். எனவே 30 வீரர்கள் பயணம் செய்யக்கூடிய சிறிய பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளோம். இவை குண்டு துளைக்காத வகையில் வடிவமைக்கப்படும். சிஆர்பிஎப் படையின் ஒவ்வொரு பட்டாலியனிலும் வெடிகுண்டுகளை கண்டறியும் நிபுணர்கள் அடங்கிய குழு உருவாக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் ஆயுத தொழிற்சாலை அமைப்பு (ஓஎப்பி) தயாரித்த கண்ணிவெடி பாதுகாப்பு வாகனங்களை சிஆர்பிஎப் ஏற்கெனவே பயன்படுத்தி வருகிறது. மேலும் பிரான்ஸ் தயாரிப்பான ‘ஷெர்பா' கண்ணிவெடி பாதுகாப்பு வாகனத்தையும் காஷ்மீரில் சோதனை அடிப்படையில் சிஆர்பிஎப் பயன்படுத்தி வருகிறது. கடந்த 2 மாதங்களில் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் நடந்த என்கவுன்ட்டர்களில் இந்த வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது. அடர்ந்த வனப்பகுதியிலும் வாகனத்தை இயக்க முடியும். சிஆர்பிஎப் படைக்காக பிரான்ஸின் அதிநவீன ‘ஷெர்பா' கண்ணிவெடி பாதுகாப்பு வாகனங்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close