[X] Close

தெலுங்கு தேசம் தொண்டரை ஓட ஓட விரட்டி அடித்த நடிகர்


  • kamadenu
  • Posted: 09 Apr, 2019 08:12 am
  • அ+ அ-

-மு.யுவராஜ்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மக்களவைத் தேர்தலில் போட்டியிடாதது ஏன் என்பதற்கான பின் னணி தகவல் தெரியவந்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி 2018 பிப்ரவரி யில் தொடங்கப்பட்டது. அப்போதிருந்தே காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன் கமல்ஹாசன் நெருக்கம் காட்டி வந்தார். ஆனால், அவரது கட்சி யுடன் கூட்டணி சேர அக்கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை.

இதைத் தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி யின் 40 மக்களவை தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக கமல் அறிவித் தார். தானும் கண்டிப்பாக போட்டியிடுவ தாகவும் கூறிவந்தார். அவரது சொந்த தொகுதியான ராமநாதபுரத்தில் போட்டி யிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை சென்னையில் கடந்த 20-ம் தேதி வெளி யிட்ட கமல்ஹாசன், எஞ்சிய தொகுதிகளுக் கான பட்டியலை கோவையில் நேற்று முன்தினம் வெளியிட்டார். இத்தேர்தலில், தான் போட்டியிடவில்லை என்றும் அறிவித்தார். இது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான காரணம் குறித்து மக்கள் நீதி மய்யம் வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தேர்த லில் முதல்வர் வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்பதுதான் கமல்ஹாசனின் முதல் இலக்கு. சட்டப்பேரவை தேர்தலுக்காக மக்களிடம் போய் வாக்கு கேட்கும் போது எந்த சிக்கலோ, தர்மசங்க டமோ ஏற்படக் கூடாது என்றுதான் தற் போது கூட்டணி விஷயத்திலும் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டார். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்தார்.

மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஒருசில கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்று கமல் எதிர்பார்த்திருந்தார். ஆனால், அந்த கட்சிகள் கூட்டணி சேர முன்வரவில்லை.

இந்த நிலையில், தான் போட்டியிடுவது தொடர்பாக முக்கிய நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசித்து வந்தார்.

கட்சி தொடங்கி ஓராண்டு மட்டுமே ஆவதால், கட்டமைப்பு, வாக்கு பலம் குறித்து கணிக்க முடியாது. இப்படிப்பட்ட சூழலில், கட்சியின் தலைவர் தோல்வியை சந்திக்கும் நிலை உருவானால், அடுத்து வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் பின்ன டைவை ஏற்படுத்தும். எனவே, மக்களவைத் தேர்தலில் கமல் போட்டியிடாமல் தவிர்ப்பது நல்லது என்று நிர்வாகிகள் கூறியதாக தெரிகிறது. இதையடுத்தே, தனது முடிவை கமல்ஹாசன் மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும், மக்கள் நீதி மய்யத்தின் வாக்கு வங்கியை தெரிந்துகொள்ள இத்தேர்தலை ஒரு முன்னோட்டமாக பயன் படுத்தவும் கமல் முடிவு செய்துள்ளார். அடுத்து வரவுள்ள சட்டப்பேரவை தேர் தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள இந்த நடவடிக்கைகள் பயன்படும் என்று அவர் கருதுகிறார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தயக்கம் எதுவும் இல்லை

மக்களவைத் தேர்தலில் போட்டியிடாதது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் போட்டியிட தயக்கம் எதுவும் இல்லை. தேர்தலில் போட்டியிடும் பல்லக்கில் நான் பவனி வருவதைவிட, அந்த பல்லக்குக்கு தோள்கொடுக்கவே விரும்புகிறேன். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முகங்கள் இன்று அடையாளம் தெரியாதவையாக இருக்கலாம். மக்களுக்கு அவர்களை அறிமுகப்படுத்தி, தெரியவைப்பது என் கடமை. அதற்கு என் முகத்தை பயன்படுத்துகிறேன்.

ஒரு தொகுதியில் போட்டியிட்டால், அதே இடத்தில்தான் தங்கியிருக்க நேரிடும். நான் நிற்காததால், அனைத்து பகுதிகளுக்கும் சென்று அதிக மக்களை சந்திக்கலாம். 40 தொகுதிகளுக்கும் 2 முறையாவது சென்றுவிட ஆசை. இவ்வாறு கமல் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close