[X] Close

தேர்தல் பிரச்சாரம் எப்படி இருக்கும்?-  காங்கிரஸ் தலைவர் ராகுல் விளக்கம்


  • kamadenu
  • Posted: 09 Apr, 2019 08:08 am
  • அ+ அ-

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண் வேட்பாளர், நண்டுகளை கொண்டுவந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் நர்மதா. பட்டினப்பாக்கத்தில் கடல் அரிப்பால் சேதமடைந்தவர்களுக்கு அரசு உதவவில்லை என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைக் கூறி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நண்டு விடும் போராட்டம் நடத்தி கைதானவர். இவர் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் வந்த அவர் லுங்கி, சட்டையுடன், தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு, கையில் நண்டுகளையும் எடுத்துக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். அந்த நண்டுகளை பறிமுதல் செய்த பிறகு, அவரை போலீஸார் உள்ளே அனுமதித்தனர்.

பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தியிடம் மனு தாக்கல் செய்தபோது, அவரது மனுவை முன்மொழிபவர்களின் விவரங்களை அலுவலர்கள் சரிபார்த்தனர். இவருக்கு முன்மொழிந்த 10 பேரில் 9 பேரின் முன்மொழிவுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இன்னொருவருக்காக நர்மதா பலரையும் செல்போனில் தொடர்புகொண்டு பேசினார். மாறி மாறி செல்போனில் பேசியபடி ஆட்சியர் அலுவலகத்தில் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்தார். ஆனால் அவருக்காக யாரும் முன்மொழிய வரவில்லை.

இதுகுறித்து நர்மதாவிடம் கேட்டபோது, ‘‘எனக்காக முன்மொழிந்த 10 பேரில் ஒருவர் பற்றிய விவரங்கள், வாக்காளர் எண் போன்றவை இணையதளத்தில் இல்லை. அவருக்கு பதிலாகஎனது உறவினர் ஒருவரை அழைத்தேன். அவர் காஞ்சிபுரம் தொகுதி என்பதால் எனக்கு முன்மொழிய முடியாது. மேலும் நான் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் மட்டுமே கொண்டுவந்தேன். சில படிவங்களில் ஸ்டாம்ப் சைஸ்புகைப்படங்களும் ஒட்ட வேண்டியுள்ளது. உரிய முன்மொழிவுகளுடனும், தேவையான புகைப்படங்களுடனும் நாளை வந்து மனு தாக்கல் செய்வேன்’’ என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close