[X] Close

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?- சொல்கிறார் 2-ம் இடம் பிடித்த பெண்


upsc-second-rank-holder-is-mother-of-a-4-year-old

  • பாரதி ஆனந்த்
  • Posted: 28 Apr, 2018 12:55 pm
  • அ+ அ-

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்த அனுகுமாரி கூறியுள்ளார். 2017 யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இத்தேர்வில், ஹரியாணா மாநிலம் அனுகுமாரி இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார். இவருக்கு 4 வயது குழந்தை ஒன்று உள்ளது.

அனுகுமாரி தனது 2-வது முயற்சியில் இத்தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம் அவர் படிப்புக்காக செலவழித்திருக்கிறார்.

இது குறித்து அவர், "உங்கள் வாழ்க்கையில் சாதனைகள் புரிய வேண்டுமானால் மன உறுதி தேவை. மன உறுதி மட்டும் இருந்தால் நீங்கள் வெற்றியாளர் ஆவதை யாராலும் தடுக்க இயலாது. முதல் முயற்சியில் வெறும் 1 மதிப்பெண்ணில் கட் ஆஃப் இலக்கை நழுவவிட்டாலும் என்னால் அடுத்த முயற்சியில் வெற்றி பெற முடியும் என்று உறுதி இருந்தது. அந்த மன உறுதிதான் தற்போது வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்:
ஐஏஎஸ் அதிகாரி ஆன பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வதில் அதிக முக்கியத்துவம் அளிப்பேன் என அனுகுமாரி கூறியிருக்கிறார்.

யார் இந்த அனுகுமாரி?
1. அனுகுமாரி ஹரியாணா மாநிலம் சோனிபாட் பகுதியைச் சேர்ந்தவர்.
2. இந்து கல்லூரியில் இயற்பியல் படித்துள்ளார்.  
3. 2016-ல் முதன்முறையாக யுபிஎஸ்சி தேர்வு எழுதினார். அம்முறை வெறும் 1 மதிப்பெண்ணில் அவர் கட் ஆஃப் இலக்கை நழுவவிட்டார். 2018-ல் மீண்டும் தேர்வை எழுதி வெற்றி பெற்றுள்ளார்.
4. 4 வயது குழந்தையையும் பார்த்துக் கொண்டு அனு தினமும் 10 மணி நேரம் படிப்புக்காக செலவழித்துள்ளார்.

முதல்வர் பாராட்டு..
அனுகுமாரி ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் பாராட்டு தெரிவித்துள்ளார். ஹரியாணா மாநில பெண்களுக்கு அனுவின் வெற்றி உத்வேகம் அளிக்கும் என தான் நம்புவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close