[X] Close

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சையது சலாலுதீன் கூட்டாளிகளின் ரூ.1.22 கோடி சொத்துகள் பறிமுதல்


cash-seized-from-terrorists-account

  • kamadenu
  • Posted: 20 Mar, 2019 11:06 am
  • அ+ அ-

தீவிரவாதி சையது சலாலுதீன் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், ஜம்மு-காஷ்மீரில் உள்ள அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான ரூ.1.22 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ள ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் சையது சலாலுதீன். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் இந்த அமைப்பு, ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்தை வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு ஹிஸ்புல் முஜாகிதீன் சார்பில் அதிக அளவில் நிதி வழங்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பான குற்றச்சாட்டின்பேரில், அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில், ஹிஸ்புல்முஜாகிதீன் சார்பில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள சிலருக்கு ஹவாலா மூலம் கோடிக்கணக்கிலான பணம் அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் உள்ள பண்டிபோரா பகுதியைச் சேர்ந்த முகமது சபி ஷா உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் 7 பேருக்கு சொந்தமான ரூ.1.22 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை நேற்று பறிமுதல் செய்தது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close