[X] Close

இயக்குநர் மகேந்திரன் வாழ்வின் அழகியலை நுட்பமாக காட்சிப்படுத்தும் திரைச்சித்திரங்களைத் தந்தவர்: தினகரன் இரங்கல்


  • kamadenu
  • Posted: 02 Apr, 2019 12:27 pm
  • அ+ அ-

 

திருவனந்தபுரம், பிடிஐ

மக்களவைத் தேர்தல் என்பது தேசத்தில் நிலவும் ஏழ்மை, வறுமை, நோய், வளர்ச்சி ஆகிய பிரச்சினைகள் தீர்ப்பதன் அடிப்படையில்தான் இருக்கவேண்டும். ஆனால், புல்வாமா தாக்குதலுக்கு பின், மக்களவைத் தேர்தலை தேசப்பாதுகாப்பு தேர்தலாக பாஜக அரசு மாற்றிவிட்டது என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக இருக்கும் சசி தரூர், வரும் மக்களவைத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திருவனந்தபுரத்தில் சசிதரூர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மக்களவைத் தேர்தல் என்பது தேசத்தில் தற்போது முக்கியப் பிரச்சினைகளாக இருக்கும் ஏழ்மை, வறுமை, நோய், வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில்தான் இருக்க வேண்டும். ஆனால், புல்மாவா தாக்குதலுக்கு பின், மக்களவைத் தேர்தலை, பாஜக தலைமையிலான அரசு (காக்கி தேர்தல்) தேசப்பாதுகாப்பு தேர்தலாக மாற்றிவிட்டது

மக்களிடத்தில் தேசப்பற்று எனும் விஷயத்தை திடீரென உயர்த்திப் பிடித்து, நாட்டை மிகப்பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றப்போவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரையிலும், நான் சார்ந்திருக்கும் கட்சியைப் பொறுத்தவரையிலும் தேசம் எந்தவகையான சாவலையும் எதிர்கொள்ளவில்லை.

தேசத்தில் அன்றாடம் மக்கள் பட்டினியிலும், ஏழ்மையிலும், நோயினாலும் பாதிக்கப்படுகிறார்கள், அதில் மத்தியஅரசு கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும். அதற்காக நான் தேசப்பாதுகாப்பை குறைத்துமதிப்பிடவில்லை.

புல்வாமா தாக்குதலுக்கு பின் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் பாஜக அரசுக்கு ஆதரவு பெருகி இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் பாஜக கட்சியின் பணி என்பது, மக்களின் உண்மையான பிரச்சினைகளை உணர்வதாக இருக்க வேண்டும்.

தேசத்தில் பாஜக ஆட்சியில் நாட்டின் தோற்றமே மாற்றப்பட்டு இருக்கிறது. பசுபாதுகாப்பு என்ற பெயரில் கடந்த 4 ஆண்டுகளில் 97 வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவங்கள் குறித்து நான் கணக்கிடவில்லை, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் இதை அறிவித்தார். இது புள்ளிவிவரம் மிகவும் கவலைப்படக்கூடியாதாகும்.

பெரும்பான்மை பெற்றுவிட்டோம் என்ற கர்வத்தில் வன்முறையைக் கொண்டாடுகிறார்கள், ஆனால், இதைப் பார்த்து பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார். இதுபோன்ற செயல் ஜனநாயகத்தின் அடித்தளத்தின் மீதான தாக்குதலாகும்.

குடியுரிமைச் சட்டத்தைத் திருத்தி அண்டை நாடுகளில் இருக்கும் இந்துக்களை மட்டும் அனுமதிப்பது, மற்ற மதத்தினரை அனுமதிக்க மறுப்பது போன்ற ஆளும் பாஜக அரசின் செயல்பாடுகள், பேச்சுகள், சகிப்புத்தன்மையற்ற போக்கு ஒருபோதும் இந்தியர்களுக்கு இருந்தது இல்லை.

வரும் மக்களவைத் தேர்தலில் மக்கள், பாஜகவை தோற்கடிப்பார்கள், 2-ம் இடத்தைக் கூட பெறு முடியாத அளவுக்கு செய்வார்கள் என்று நம்புகிறேன்.

இந்தியாவில் தீவிரவாதத்துக்கு பலியானதைக் காட்டிலும் விவசாயிகள் தற்கொலை செய்ததுதான் அதிகம். நாம் நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்கிறோம், வைத்திருக்க வேண்டும். ஆனால், உள்நாட்டில் வாழும் மக்களின் உண்மையான, நிதர்சமான பிரச்சினைகளை அறிய வேண்டும். குறிப்பாக விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க வேண்டும். வரலாற்றில் முதல் முறையாக கேரளாவில் 8 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள்.

இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. பாஜக அரசின் வேலைவாய்ப்புக் கொள்கை தோல்வி அடைந்ததன் காரணமாக, கடந்த 5 ஆண்டுகளை வீணாக்கிவிட்டது. ஏற்றுமதி மற்றும் உற்பத்தித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை பொருளாதார வளர்ச்சியை 2 சதவீதம் கடுமையாக பாதித்தது மட்டுமல்லாமல், சிறு,குறு, தொழில்களையும் நசுக்கிவிட்டது.

 

இவ்வாறு சசிதரூர் பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close