[X] Close

5 ஆண்டு எம்.பி.யாக இருந்து என்ன செய்தீர்கள்? எட்டுவழிச்சாலைக்கு எதிராகப் போராடினீர்களே: அன்புமணியைக் கேள்வி கேட்ட தொண்டருக்கு செம்மலை பளார்


5

  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 16:19 pm
  • அ+ அ-

 

 

லக்னோ, பிடிஐ

காங்கிரஸ் கட்சியுடன் எந்த கூட்டணியும் இல்லை, எங்களூக்காக 7 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தாமல் தியாகம் செய்யத் தேவையில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தடாலடியாகத் தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் தலைவர்கள் போட்டியிடும் 12 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை, அந்த கட்சிக்களுக்காக இதைச் செய்கிறோம் என்று காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்திருந்த நிலையில், இன்று மாயாவதி தடாலடியாக இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளிலும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. சமாஜ்வாதி 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதுதவிர அஜித் சங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம்கட்சிக்கு 3 இடங்களையும், சோனியா, ராகுல் போட்டியிடும் ரேபரேலி, அமேதி தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தாமல் இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன.

இதனால், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் சூழலை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக அரசியலில் நேரடியாக ஈடுபடாமல் இருந்த பிரியங்கா காந்திக்கும் பொதுச்செயலாளர் பதவி தரப்பட்டு, உ.பி. கிழக்கு மண்டலப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பார் நேற்று அளித்த பேட்டியில், " மாநிலத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் போட்டியிடும் 7 இடங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தாது. அதேபோல், அஜித் சிங் கட்சி போட்டியிடும் 3 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தமாட்டோம். மாயாவதி, அகிலேஷ் யாதவ், ஜெயந்த் சவுத்ரி ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தமாட்டோம் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்பை நிராகரிக்கும் வகையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ட்விட்டரில் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், " காங்கிரஸ் கட்சியுடன் எந்தவிதமான கூட்டணியும் இல்லை. மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்திக்கொள்ளலாம். எங்களுக்காக வேட்பாளர்களை நிறுத்தாமல் இருக்கத் தேவையில்லை.

மாநிலத்தில் பாஜகவை வெல்வதற்கு சமாஜ்வாதி, நாங்கள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவை இணைந்தாலே போதுமானது. அதனால், காங்கிரஸ் கட்சியுடன் எந்தவிதமான கூட்டணியும் உ.பியிலும், நாடுமுழுவதும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம். காங்கிரஸ் கட்சி பரப்பும் பொய்யான செய்தியை கேட்டு கட்சியினர் தவறாகச் சென்றுவிடக்கூடாது " எனத் தெரிவித்துள்ளார்.

மாயாவதியின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்திக்காக ரேபரேலி, அமேதி தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தமாட்டோம் என்று மாயாவதியும், அகிலேஷ் யாதவும் முன்பு கூறினார்கள். ஆனால், இப்போது, அவர்களின் கட்சிக்காக  7 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தமாட்டோம் என்று காங்கிரஸ் கட்சியின் பேச்சை மறுத்துள்ள மாயாவதியின் செயல் அரசியல் நோக்கர்கள் மத்தியில் வியப்பாக இருக்கிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close