[X] Close

அதிருப்தியாளர்களை சமாளிக்க புதிய உத்தி: வாய்ப்பளிக்காத எம்.பி.க்களுக்கு பதவி வழங்க பாஜக உறுதி


  • kamadenu
  • Posted: 29 Mar, 2019 05:48 am
  • அ+ அ-

பாலியல் வழக்கை திசை திருப்பவே அரசியல் பிரமுகர் மீது புகார் தெரிக்கவிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட பெண் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

திருநாவுக்கரசு கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது:

‘திருநாவுக்கரசு கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்' என வெளியான வீடியோவில் இருப்பது புகார் கொடுத்த பெண் கிடையாது. திருநாவுக்கரசால், காரில் வைத்து பாலியல் ரீதியான துன்புறுத்தலில் இருந்து தங்கள் பெண் தப்பி வந்த பின்னர், தனது அண்ணனிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இதை அடுத்து அந்த பெண்ணின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் திருநாவுக்கரசை தாக்கினர்.

இதையடுத்து திருநாவுக்கரசின் நண்பர்களால் புகார் கொடுத்த பெண்ணின் அண்ணன் மிரட்டப்பட்டதால், மலுமிச்சம்பட்டியில் உள்ள தனது குடும்ப நண்பரான பழனிச்சாமியின் உதவியை நாடியுள்ளனர். இதையடுத்து பழனிசாமி, பொள்ளாச்சி ஜெயராமனின் உதவியை நாடியுள்ளார். திருநாவுக்கரசு கும்பலால் பெண் பாதிக்கப்பட்டிருப்பது உண்மை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், பெண்ணின் அடையாளத்தை ரகசியமாக வைக்க வேண்டும் என போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். ரகசியம் காக்கப்படும் என எங்கள் பெண்ணிடம் உறுதி அளித்தார். அதன் பின்னரே நாங்கள் புகார் அளித்தோம்.

அரசியல் தொடர்புபடுத்தி..

புகார் அளிக்கப்பட்டதின் பின்னணியில் பொள்ளாச்சி ஜெயராமன் இருப்பதை தனது நண்பர்கள் மூலம் அறிந்து கொண்ட பின்னரே திருநாவுக்கரசு ஆடியோ வெளியிட்டு உள்ளார். அதில் பாதிக்கப்பட்ட பிற பெண்கள் புகார் அளித்து விடக்கூடாது என்பதற்காகவும், ஊடகங்களின் கவனத்தை தன் மீதிருந்து பொள்ளாச்சி ஜெயராமன் பக்கம் திசை திருப்பவும் இதில் பல பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் மேலும் எவ்வளவு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற கோணத்தில் சென்று கொண்டிருந்த விசாரணையில் தான் மாட்டி விடக்கூடாது என்பதற்காக அரசியல்வாதிகளை சம்பந்தப்படுத்தி ஆடியோ வெளியிட்டார். அதனால் பொதுமக்களின் கவனத்தை தன்னிடமிருந்து பொள்ளாச்சி ஜெயராமன் பக்கம் திருப்பிவிட்டார். தற்போது திருநாவுக்கரசின் நோக்கம் நிறைவேறிவிட்டது.

அரசியல் செய்ய வேண்டாம்

இதனால் பாதிக்கப்பட்ட பிற பெண்களை புகார் அளிக்க வைக்க போலீஸார் மேற்கொண்ட முயற்சிகள் வலுவிழுந்துவிட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த ஒரு பெண் மட்டுமே புகார் அளித்துள்ளதாகவும், 99 சதவீதம் பெண்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும் மிரட்டல் தொனியில் திருநாவுக்கரசு கூறியுள்ளார். இந்த வழக்கில் தயவு செய்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம். நீ பெரிதாக பாதிக்கப்படவில்லை. நீ புகார் அளிப்பதால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிற பெண்களும் தைரியமாக புகார் அளிப்பார்கள் என பலமுறை நாங்கள் ஆலோசனை அளித்த பின்னரே எங்கள் பெண் புகார் அளிக்க முன்வந்தார். எங்களுடைய பெண் தன்னை பணயம் வைத்து புகார் அளித்தார்.

இந்த சம்பவம் அரசியல் ஆக்கப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்ட பிற பெண்கள் புகார் கொடுக்க முன்வரவில்லை. எந்த நோக்கத்துக்காக எங்கள் பெண் புகார் அளித்தரோ அந்த நோக்கம் சிதைக்கப்பட்டு தோல்வி அடைந்துவிட்டது. எங்கள் பெண் பாதிக்கப்பட்ட சம்பவத்தில் பாலியல் வழக்கில் புகார் கொடுக்கப்பட்டதன் நோக்கம் சிதைக்கப்பட்டுவிட்டது

தொடர்பு இல்லை

எங்கள் பெண் பாதிக்கப்பட்ட சம்பவத்தில் ஜெயராமனின் மகன்களுக்கு தொடர்பு கிடையாது. பல்வேறு பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர், அதில் ஜெயராமனின் மகன்கள் தொடர்பு இருக்கலாமே? என்று கேள்வி எழுப்புகின்றனர். பாதிக்கப்பட்ட பிற பெண்கள் தெரிவிக்கும் புகாரில் அவரது மகன்களுக்கு தொடர்பு இருக்கிறது என ஆதாரங்கள் இருப்பது தெரியவந்தால் சிபிஐ விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வரலாம். கண்டிப்பாக எங்களுடைய பெண் பாதிக்கப்பட்ட வழக்கில் பொள்ளாச்சி ஜெயராமன் குடும்பத்துக்கு தொடர்பு இல்லை. இதை எங்கள் பெண் ஆணித்தரமாக ஆடியோவில் தெரிவித்து உள்ளார் என பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close