[X] Close

சேற்றை வாரி தூற்றி வருகிறார் ராமதாஸ்: சிதம்பரம் செயல்வீரர்கள் கூட்டத்தில் திருமாவளவன் பதில் பேச்சு


  • kamadenu
  • Posted: 28 Mar, 2019 10:50 am
  • அ+ அ-

நாட்டிலேயே மிகவும் உயரமான வாக்குச்சாவடிஇமாச்சல பிரதேசத்தில் அமைய உள்ளது. எளிதில் செல்ல முடியாதபடி தொலைவில் உள்ள வாக்குச்சாவடியும் இமாச்சலில்தான் உள்ளது.

மக்களவைத் தேர்தல் இமாச்சல பிரதேசத்தில் உள்ள 4 தொகுதிகளில் மே மாதம் 19-ம் தேதி நடக்கிறது. இதில் 51 லட்சத்து 59 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 88,127 பேர் முதல்முறையாக வாக்களிக்கின்றனர். மாநிலம் முழுவதும் 7,723 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் 367 தொகுதிகள் பதற்றம் நிறைந்த தொகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

லாகுல் ஸ்பிட்டி மாவட்டம் ஹிக்கிம் பகுதி கடல் மட்டத்தில் இருந்து 14 ஆயிரத்து 567 அடி உயரம் கொண்டது. இங்கு அமைக்கப்படும் வாக்குச்சாவடிதான் நாட்டிலேயே மிகவும் உயரமான இடத்தில் உள்ள வாக்குச்சாவடியாக இருக்கும். அதேபோல, எளிதில் செல்ல முடியாதபடி தொலைவில் உள்ள வாக்குச்சாவடியும் இமாச்சலில்தான் உள்ளது. உனா மாவட்டம் சந்தோக்கர் என்ற இடத்தில் உள்ள வாக்குச்சாவடி எளிதில் செல்ல முடியாதபடி மலைப் பகுதிகளில் தொலை தூரத்தில் அமைந்துள்ளது. தேர்தல் பணியாளர்கள் 20 கி.மீ. தூரம் நடந்துதான் அங்கு செல்ல வேண்டும். இத்தகவல்களை மாநில தலைமை தேர்தல் அதிகாரி தேவேஷ் குமார் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close