[X] Close

புதுச்சேரிக்கு `மாநில அந்தஸ்து' ஒற்றை கோஷத்தை முன்னிறுத்தும் கட்சிகள்: நிறைவேற்ற முழு முயற்சி எடுப்பார்களா?


  • kamadenu
  • Posted: 28 Mar, 2019 10:51 am
  • அ+ அ-

வரும் மக்களவைத் தேர்தலில் 4 முதல் 5 சதவீத வாக்குகளை சமூக ஊடகங்கள் தீர்மானிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி.) நிபுணர் டி.வி.மோகன்தாஸ் பாய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியான மோகன்தாஸ் பாய் நேற்று கூறியதாவது:இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள், குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் செய்திகளை தெரிந்துகொள்வதற்காக நாளிதழ்களை படிப்பதில்லை. தொலைக்காட்சி செய்திகளையும் பார்ப்பதில்லை. மாறாக, அவர்கள் யூடியூப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை செய்திகளை தெரிந்துகொள்வதற்கான முதன்மை ஊடகமாக சமூக ஊடகங்கள் விளங்குகின்றன. எனவே, சமூக ஊடகங்களில் வரும் தகவல்கள் இளைஞர்கள் மத்தியில் பெரியஅளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக வரும் மக்களவைத் தேர்தலில் 4 முதல் 5 சதவீத வாக்குகளை சமூக ஊடகங்கள் தீர்மானிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, அரசியல் கட்சிகள் இளம் வாக்காளர்களைக் கவரவேண்டுமானால், அவர்களின் உணர்வுகள், விருப்பம், எதிர்பார்ப்பு என்ன என்பதைக் கண்டறிய வேண்டும். இதன் அடிப்படையில், இளைஞர்களுக்கு பிடித்தமான தகவல்கள் அவர்களுக்கு சென்றடைய அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உதாரணமாக, சர்வதேச அளவில் இந்தியா மீதான மதிப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் வெளிநாடுகளில் வேலை செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு ஏற்ற தகவலையும் அவர்களுக்கு தெரிவிக்கலாம்.

மோடி மதிப்பு உயர்வு சமூக ஊடகங்கள் மூலம் இளைஞர்களைக் கவர்வதில் பாஜக முன்னிலையில் உள்ளது. இளைஞர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி மீதான மதிப்பு மிகவும் நன்றாக உள்ளது. அதேநேரம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் இளைஞர்களின் கவனத்தை அவ்வளவாக ஈர்க்க முடியவில்லை. ஏனெனில் அவர் 1990-களின் மொழியில் பேசி வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close