[X] Close

நல்லதே நடக்கும்!


  • kamadenu
  • Posted: 26 Mar, 2019 08:39 am
  • அ+ அ-

காஷ்மீரில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள இந்திய கிராமப் பகுதிகளில் இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்து துப்பாக்கிச்சூடு, வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட பாகிராஸ்தான் ராணுவத்திற்கு இந்திய தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்ததாவது:

பாகிஸ்தான் ராணுவம் தனது எல்லையைத் தாண்டி போர்நிறுத்த கட்டுப்பாட்டை மீறி  இந்திய எல்லைப்பகுதிக்குள் இன்று அதிகாலை மீண்டும் நுழைந்தது. பூஞ்ச் மாவட்ட கிராமப் பகுதிகளில் இன்று அதிகாலை 4.30 மணி முதல் கிருஷ்ணா காதி செக்டரில் துப்பாக்கிச் சூடு நடத்தியது. மேலும் வெடிகுண்டு தாக்குதலிலும் அது ஈடுபட்டது.

பாக். ராணுவத்தின் இத்தாக்குதல்கள் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மெந்தார் செக்டரில் பால்நொய் மற்றும் மங்கோட் ஆகிய இரு இடங்களிலும் ஷாஃக்பூர் செக்டரிலும் நடந்தது. எனினும் இந்திய ராணுவம் இதற்கு தகுந்த பதிலடி கொடுத்தது,

இரு தரப்பிலும் நடந்த தாக்குதல்கள் காலை 7.30 மணி வரை தொடர்ந்தது.

இத்தாக்குதல் சம்பவம் இன்று அதிகாலை குறுகிய நேரத்திலேயே நடந்து முடிந்தது. இதில் இந்திய தரப்பில் சேதம் எதுவுமில்லை.

பாகிஸ்தான் ராணுவம், சனிக்கிழமை இரவில் பல மணிநேரங்களாவே, ராஜவுரி மாவட்டத்தில் சுந்தர்பாணி செக்டரில் இந்திய நிலைகளை நோக்கி குறிவைக்கத் தொடங்கிவிட்டது.

இவ்வாறு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாக். ராணுவத்தின் போர் நிறுத்த மீறல்கள்

பிப்ரவரி 14 புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து பிப்ரவரி 26 ம் தேதி பாலக்கோட்டில் உள்ள ஜெய்ஷ்-ஈ-முகமது பயங்கரவாத முகாமில் வான்வழித் தாக்குதல் மூலமாக பதிலடி அளித்தது. இத்தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் தொடர்ந்து போர்நிறுத்த மீறல்களில் ஈடுபட்டுள்ளது.

100க்கும் மேற்பட்ட தாக்குதல்கள்

அப்போதிருந்த 100க்கும் மேற்பட்ட போர்நிறுத்த மீறல்களில் 80 கிராமங்களை பாகிஸ்தான் தாக்கியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உள்ளிட்ட 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்

அடிக்கடி போர் நிறுத்த மீறல்கள் நடப்பதால் எல்லைப் பகுதி கிராம மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளன, பூஞ்ச் மற்றும் ராஜோவ்ரி ஆகிய இரு மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக எல்லையிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் உள்ள கல்வி நிறுவனங்களை மூடுவதற்கு அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

எல்லைப் பகுதிகளில் துப்பாக்கிச்சூடு குறைந்தநிலையில், ஒரு சில நாட்களுக்கு முன்பு பெரும்பாலான பள்ளிகள்  மீண்டும் திறக்கப்பட்டன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close