[X] Close

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களை அவமானப்படுத்துகிறது காங்கிரஸ்


  • kamadenu
  • Posted: 24 Mar, 2019 07:39 am
  • அ+ அ-

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: இந்தியக் குடும்பங்கள் தாய் என்ற பெண்ணை அடித்தளமாக கொண்டு இயங்குகிறது. அவர்கள், குடும்பத்தை பாதுகாப்பவளாகவும், குடும்ப உறுப்பினர்களுக்கு உற்ற தோழியாகவும், வழிகாட்டியாகவும், முன்னுதாரணமாகவும் பன்முகத்தன்மையோடும் திகழ்கிறார்கள். இந்த நன்னாளில் அனைத்து மகளிருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் பழனிசாமி: பெண்களின் சிறப்பையும், உரிமைகளையும் உலகுக்கு பறைசாற்றும் வகையில் உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில், பெண்கள் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் செயல்பட்டு, வாழ்வில் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு, இருளை நீக்கும் ஒளி விளக்காக பாரினில் உயர்ந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: மகளிர் அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆதரவுடன் அந்த அரசு மத்தியில் அமைந்தவுடன் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்படும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் திமுக தீவிரமாக மேற்கொள்ளும் என்று சர்வதேச மகளிர் தினத்தில் உறுதி செய்து சபதம் ஏற்கிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: மகளிர் உரிமைகளை பாதுகாப்பதில் காங்கிரஸ் முன்னோடியாக உள்ளது. சட்டப்பேரவை, மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத் தருவதே காங்கிரஸின் லட்சியம். இந்நன்னாளில் மகளிர் சமுதாயத்துக்கு மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக ‘செல்வமகள் சேமிப்பு திட்டம்’,பெண்கள் பொருளாதாரம், தொழிலில் முத்திரை பதிக்க ‘முத்ரா வங்கி திட்டம்’ கொண்டு வந்து, சவாலான துறைகளை மகளிருக்கு வழங்கியதன் மூலம் பெண்களின் நம்பிக்கை நட்சத்திரமாக பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார். இந்த சூழலை பயன்படுத்திக்கொண்டு மகளிர் அனைவரும் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: மகளிருக்கு அதிகாரம் அளிப்பதற்கான 33 சதவீத இட ஒதுக்கீடு என்ற கனவை நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொள்ள இந்நன்னாளில் அனைவரும் உறுதியேற்போம். மகளிர் சமுதாயத்துக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: பெண்களை கவுரவப்படுத்தும் வகையில் என்றைக்கும் தேமுதிக இருக்கும். இந்த உலக மகளிர் தினத்தில், மகளிர் அனைத்து நலமும், வளமும் பெற்று வாழ எனது இதயமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

விசிக தலைவர் தொல்.திருமாவளவன்: உலக மக்கள் தொகையில் சரி பாதியாக உள்ள பெண்களுக்கு எல்லா தளங்களிலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கப் பெற்று பாலின சமத்துவம் அமைய பாடுபடுவோம் என இந்நன்னாளில் உறுதியேற்போம்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: நாளுக்குநாள் எத்தனையோ சாதனைகளை படைத்து வரும் மகளிருக்கு மேன்மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த உலக மகளிர் தினம் அமைய வாழ்த்துகிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: பெண்களின் உரிமைக்காகவும், கல்வி, வேலைவாய்ப்பு, வளமான பாதுகாப்பான வாழ்க்கைக்காகவும், அவற்றை சீர்குலைக்கும் கொள்கைகளுக்கு எதிராகவும் முன்பைவிட வீரியமான போராட்டங்களை கட்டமைப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எவ்வித சமரசமும் இன்றி ஈடுபடும் என்று உறுதியேற்று, உலக மகளிர் தின வாழ்த்துகளை உரித்தாக்குகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் இரா.முத்தரசன்: பெண்களின் திறனும், வெற்றியும் தடைகளைத் தாண்டி நாள்தோறும் வெளிப்படும். இந்நாளில் பெண்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

அமமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி. தினகரன்: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெருங்கனவான சட்டப்பேரவை மற்றும் மக்களவையில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டுவர இந்நாளில் சபதம் ஏற்போம். மனித குலத்தை வாழ்விக்கின்ற பெண்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி: மகளிர் உரிமைகளை வென்றெடுத்த இந்த நாளில், அனைத்து துறைகளிலும் ஆணுக்கு நிகராக பெண்களும் உயர உழைப்போம். இந்த நாளில் மகளிருக்கு உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சமக தலைவர் சரத்குமார்: இன்று விண்ணில் பறந்து சாதனை படைக்கும் அளவுக்கு பெண் சமுதாயம் முன்னேறியுள்ளது. இந்த நன்னாளில் அனைத்து மகளிருக்கும் இனிய நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர்: பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கவும், அவை பாதுகாக்கப்படவும் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் எனக்கூறி, அனைத்து மகளிருக்கும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

சமத்துவ மக்கள் கழகத் தலைவர் ஏ.நாராயணன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்ளிட்டோரும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close