[X] Close
 

பாஜக எம்பி., எம்எல்ஏக்களே முதலிடம்…எதில் தெரியுமா?


crime-against-women-bjp-mp-mlas-leading

  • போத்திராஜ்
  • Posted: 20 Apr, 2018 12:50 pm
  • அ+ அ-

நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள், குற்றங்களில் பாஜக எம்.பி., எம்எல்ஏக்களே அதிகமாக ஈடுபட்டுள்ளனர் என்று ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. 

ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு(ஏடிஆர்) எனும் தன்னார்வ சமூக நல நிறுவனம் நாடுமுழுவதும் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் வேட்புமனுத்தாக்கலின் போது அளித்த பிரமாணப்பத்திரத்தை ஆய்வு செய்து, அதில் அவர்களின் கிரிமினல் குற்றங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: 

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் எம்.பி.க்கள், எம்எல்ஏக்ககளுக்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளன. குறிப்பாகப் பலாத்கார வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகத் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  
இதில் 1580 எம்பி, எம்எல்ஏக்கள் அளித்த விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் 33 சதவீதம் அதாவது 48 எம்எல்ஏக்கள், 48 எம்பிக்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிய வந்தது. 

இதில் அதிகபட்சமாக பாஜக எம்.பி,எம்எல்ஏக்களே பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். மத்திய, மாநில அளவில் 12 எம்.பி.எம்எல்ஏக்கள் மீது பலாத்கார வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 

அதைத் தொடர்ந்து சிவசேனா கட்சியின் 7 பேரும், திரிணாமுல் காங்கிரஸ் 6 பேரும் மீதும் பலாத்கார குற்றச்சாட்டுகள் உள்ளன. 
பலாத்கார குற்றங்கள் உள்ளிட்ட தீவிரமான குற்றச்சாட்டுகள் இருக்கும் எம்.பி., எம்எல்ஏ.க்கள் குறித்து நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்துள்ளது, 

இதில் அதிகபட்சமாக மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பாஜகவின் 12 எம்.பி.எம்எல்ஏக்கள் மீது பலாத்கார குற்றச்சாட்டுகள் உள்ளன. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 11 எம்.பி. எம்எல்ஏ.க்கள் மீதும், ஒடிசா,ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த 5 எம்.பி.எம்எல்ஏக்கள் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. 

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட 327 பேருக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் வாய்ப்பு கொடுத்துள்ளன. அதேபோல 40 பேருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு அரசியல் கட்சிகளும் 287 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புத் தரப்பட்டுள்ளன. 

கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் உள்ள 118 சுயேட்சை வேட்பாளர்களும் மக்களவை, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். 

இதில் தெலங்குதேசம் கட்சியின் எம்எல்ஏ கொனுகுண்டலா சூரியநாராயணா, குஜராத் பாஜக எம்எல்ஏ ஜெதாபாய் ஜி அஹிர், பீஹார் மாநில ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்எல்ஏ குலாப் யாதவ் ஆகியோர் மீது பலாத்கார வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. 

கிரிமினல் குற்றங்கள், குறிப்பாகப் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல்ரீதியான குற்றச்சாட்டுக்களில் சிக்கியவர்களுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும், வழக்கு நிலுவையில் உள்ளவர்களும் தேர்தலில் போட்டியிடக் கூடாது. 
இவ்வாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

 
 



MGR - Kindle Edition


[X] Close