[X] Close

வாட்ஸ் அப் பயன்படுத்தும் நாடுகள்: முதலிடத்தில் இந்தியா 


mobile-whats-app

  • kamadenu
  • Posted: 20 Apr, 2018 11:44 am
  • அ+ அ-

வாட்ஸ் அப்பை அதிகம் பயன்படுத்துபவர்கள் இந்தியர்கள்தான் என்று காம்ஸ்கேர் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

மெயில், ஆர்குட், ஃபேஸ்புக் என்று கணினியை மையப்படுத்திய தொழில்நுட்ப வளர்ச்சியில் வாட்ஸ் அப் செல்போனை மையப்படுத்துவதால் அதற்கான மவுசு அதிகம் என்று சொல்லலாம். வாட்ஸ் அப்பை அணுக ஸ்மார்ட் போனே போதும் என்னும் நிலையின் காரணமாக, அது ஃபேஸ்புக்கைவிட எளிதில் இளைஞர் உலகத்தில் ஊடுருவிவிட்டது. 

மொபைல் எண்களின் வழியாக தனிநபர் மற்றும் கூட்டு உரையாடலுக்கு பயன்படும் சமூக வலைதளமாக வாட்ஸ் அப் இயங்கி வருகிறது. கோடிக்கணக்கான மக்களுக்கு குறுஞ்செய்தி தகவல்களை அனுப்ப வாட்ஸ் அப் பயன்படுவதால் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் இந்தியர்களில் மூன்றில் ஒருவரது ஸ்மார்ட் போன் சேமிப்புப் பகுதி நிரம்பியுள்ளதாக ஏற்கெனவே ஒரு ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டது. 

சமீபத்தில் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட தகவலின்படி,  20 பில்லியன் புத்தாண்டு செய்திகள் இந்தியாவிலிருந்து வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் செல்போனில் வாட்ஸ் அப் செயல்பாடு குறித்து காம்ஸ்கேர் என்ற நிறுவனம் உலகம் முழுவதும் ஒரு ஆய்வை நடத்தியது. அதில் எந்த நாட்டைச் சார்ந்தவர்கள் அதிகம் செல்போன் வழியாக வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு நடத்தியபோது இந்தியர்கள்தான் என்பது தெரிய வந்துள்ளது. 2017-ம் ஆண்டு நிலவரப்படி 89% இந்தியர்கள் ஸ்மார்ட்போன் வழியாக வாட்ஸ் அப் செயலி மூலம் தகவல் தொடர்பை மேற்கொள்கின்றனர். 
இந்தோனேஷியாவில் 87% பேரும், மெக்ஸிகோவில் 80% பேரும் வாட்ஸ் அப் வழியாக தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம் செல்போன் மூலம் வாட்ஸ் அப் பயன்பாட்டில் இந்தியா முதலிடம் வகிப்பதாக காம்ஸ்கேர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close