[X] Close

பெரியகுளம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்


  • kamadenu
  • Posted: 22 Mar, 2019 11:05 am
  • அ+ அ-

பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரபூர்வ இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் சூழலில், அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. தேசியக் கட்சிகளாக பாஜகவும் காங்கிரஸும் போட்டி போட்டுக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இளைஞர்களைக் கவரும் வகையில் கட்சிகள், இணையத்தில் தங்களின் சாதனைகளைக் கூறி, வாக்குகளைச் சேகரித்து வருகின்றன. குறிப்பாக வலைதளம், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் ஆகியவற்றின் மூலம் முழு வீச்சில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரபூர்வ இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்போ அல்லது தனிநபரோ பொறுப்பேற்கவில்லை.

பாஜக சார்பில் இதுகுறித்து யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. எனினும் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தின் முகப்பில், ''இடையூறுக்கு வருந்துகிறோம். பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் மீண்டும் சந்திப்போம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close