[X] Close

மகா சிவராத்திரி கொண்டாட்டங்களுடன் திரிவேணி சங்கமத்தில் நிறைவு பெற்றது கும்பமேளா: 22 கோடி பக்தர்கள் புனித நீராடினர்


kumbamela

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 05 Mar, 2019 06:13 am
  • அ+ அ-

உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வந்த கும்பமேளா, மகா சிவராத்திரியான நேற்றுடன் நிறைவு பெற்றது. கும்பமேளா தொடங்கியதில் இருந்து நேற்று வரை 22 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரில் கடந்த ஜனவரி 15-ம் தேதி மகர சங்கராந்தி அன்று கும்பமேளா விழா தொடங்கியது. உலகிலேயே அதிக மக்கள் கூடும் விழா என்று பெயர் பெற்ற கும்பமேளாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், கடந்த 52 நாட்களாக நடைபெற்று வந்த கும்பமேளா நிகழ்ச்சி, நேற்று மகா சிவராத்திரி கொண் டாட்டங்களுடன் நிறைவுபெற்றது. கும்பமேளாவின் போது தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் (கங்கை, யமுனை மற்றும் காணாமல் போன சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சேரும் இடம்) புனித நீராடினர்.

குறிப்பாக கும்பமேளாவின் போது முக்கியமான 6 நாட்களில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம். அதன்படி, ஜனவரி 15-ம் தேதி மகர சங்கராந்தி, ஜனவரி 21-ம் தேதி பவுஷ் பூர்ணிமா, பிப்ரவரி 4 மவுனி அமாவாசை, பிப்ரவரி 10-ம் தேதி பசந்த் பஞ்சமி மற்றம் பிப்ரவரி 19-ம் தேதி மகி பூர்ணிமா ஆகிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

கடந்த ஜனவரி 15-ம் தேதியில் இருந்து இதுவரை 22 கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கும்பமேளாவின்போது பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில தலைவர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் புனித நீராடினர்.

மகா சிவராத்திரி தான் கும்பமேளாவின் மிக முக்கியமான நாள். இந்த நாளில்தான் சிவபெருமான் திருமணம் செய்து கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே, இந்த மகா சிவராத்திரிக்காக பக்தர்கள் காத்திருந்து, கடைசி நாளில் புனித நீராடுவது வழக்கம். பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு திங்களன்று மகா சிவராத்திரி வந்துள்ளது. திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த நாளாகக் கூறப்படுகிறது. எனவே, திங்கட்கிழமையும் மகா சிவராத்திரியும் ஒன்றாக வந்ததால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கும்பமேளா நிறைவு நாளான நேற்று மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராட வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதை முன்னிட்டு உத்தரபிரதேச போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். கும்பமேளா நடைபெறும் பகுதி முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தீவிரவாத தாக்குதல்களை சமாளிக்க தீவிரவாத தடுப்பு கமாண்டோக்கள் உட்பட பல்வேறு சிறப்பு படையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

கின்னஸ் சாதனை

மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரயாக்ராஜ் நகரில் நேற்று சிவலிங்கங்களுக்கு ‘ருத்ராபிஷேகம்’ உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும், 2019-ம் ஆண்டு கும்பமேளா கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது. அதிகமான போக்குவரத்து மற்றும் பக்தர்களின் கூட்டத்தை முறைப்படுத்த திட்டம் தீட்டியது, ‘என் நகரை ஓவியம் தீட்டுங்கள்’ நிகழ்ச்சியை மிக பிரம்மாண்டமாக நடத்தியது, சுகாதார வசதிகள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகளை பிரம்மாண்டமாக செய்தது ஆகிய விஷயங்களில் கும்பமேளா நிகழ்ச்சி கின்னஸ் சாதனையில் இடம்பெறுள்ளது. கின்னஸ் உலக சாதனை நிர்வாகத்தைச் சேர்ந்த 3 பேர் பிரயாக்ராஜ் பகுதிக்கு வந்து 3 நாட்கள் ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close