[X] Close

பாட்னா சாஹிப் தொகுதியில்தான் போட்டி: எம்.பி. சத்ருஹன் சின்ஹா திட்டவட்டம்


nitin-gadkari-to-contest-in-election

  • kamadenu
  • Posted: 04 Mar, 2019 10:49 am
  • அ+ அ-

வரும் மக்களவைத் தேர்தலில் பிஹாரின் பாட்னா சாஹிப் தொகுதியில் தான் போட்டியிடப் போவதாக நடிகரும், பாஜக எம்.பி.யுமான சத்ருஹன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

பாட்னா சாஹிப் தொகுதி எம்.பி.யாக உள்ள சத்ருஹன் சின்ஹா கடந்த சில ஆண்டுகளாக பாஜக தலைமையை கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றுக்கு எதிராகவும் அவர் கருத்து தெரிவித்து வந்தார்.

இதன் காரணமாக, அவர் மீது பாஜக தலைமை அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், வரும் மக்களவைத் தேர்தலில் அவருக்கு மீண்டும் பாட்னா சாஹிப் தொகுதியை வழங்குவதில் கட்சி தலைமைக்கு விருப்பமில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு நேற்று வந்திருந்த சத்ருஹன் சின்ஹாவிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், "பாஜகதலைமை என்ன முடிவு எடுக்கிறது என்பது குறித்து எனக்கு கவலை இல்லை. எத்தகைய சூழல் இருந்தாலும், பாட்னா சாஹிப் தொகுதியில்தான் நான் போட்டியிடுவேன்"என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close