இந்திய நிறுவன நிகழ்ச்சிகளை ஈர்க்க மாஸ்கோவில் பயிற்சி


மாஸ்கோ | கோப்புப் படம்

சென்னை: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் வணிக சந்திப்புகளை நடத்துவதை அதிகரிக்க ‘மைஸ்’ (MICE - Meetings, Incentives, Conferences, and Exhibitions) என்ற புதிய பயிற்சி திட்டத்தை மாஸ்கோ சுற்றுலாத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த இணையவழி பயிற்சித் திட்டத்தில், மாஸ்கோவில் கார்ப்பரேட் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது, நிகழ்ச்சிக்கான நிரலைத் திட்டமிடுவது குறித்து இந்தியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும். மாஸ்கோவில் மாநாடுநடத்துவதற்கான வசதிகள், தங்குமிடங்கள், போக்குவரத்து வசதி, நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் பற்றி பயிற்றுவிக்கப்படும்.

கார்ப்பரேட் நிகழ்வுகளுக்கான முதன்மை சுற்றுலா நகரமாக ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவை மாற்றும் நோக்கில்இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதுகுறித்து மாஸ்கோ நகர சுற்றுலாத் துறைதலைவர் எவ்ஜெனி கோஸ்லோவ் கூறுகையில், “இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் வணிக நிகழ்வுகளை மாஸ்கோவில் நடத்த ஊக்குவிக்கிறோம். கார்ப்பரேட் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது சார்ந்த நுணுக்கங்களை இந்தியர்களுக்கு கற்றுத் தரு கிறோம்’’ என்று தெரிவித்தார்.