[X] Close

கர்நாடகாவில் உச்சம் தொடும் வாரிசு அரசியல் இரு பேரன்களை களமிறக்குகிறார் தேவகவுடா


devagowda

  • kamadenu
  • Posted: 03 Mar, 2019 09:39 am
  • அ+ அ-

முன்னாள் பிரதமரும் மஜத தேசியதலைவருமான தேவகவுடா, கர்நாடகாவில் காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வருவற்கு முன்னரே பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

தேவகவுடா தனது மூத்த மகனும், மாநில பொதுப்பணித் துறை அமைச்சருமான ரேவண்ணாவின் மகன் ப்ரஜ்வல் ரேவண்ணாவை ஹாசன் அல்லது துமக்கூருவில் களமிறக்க முடிவெடுத்துள்ளார். இதனால் ஊற்சாகம் அடைந்துள்ள ப்ரஜ்வல் ரேவண்ணாவின் தாய் பவானி நேற்று ஹாசன் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார். ஒக்கலிகா சங்க மாநாட்டில் தனது மகனுக்கு வாக்களிக்கும்படி அவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு ப்ரஜ்வல் ரேவண்ணா, “ஹாசன் தொகுதியில் நீண்ட காலமாக போட்டியிட்டு வரும் எனது தாத்தா தேவகவுடாவே மீண்டும் களமிறங்க வேண்டும். அவரை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்பதே என் எண்ணம். நான்வேண்டுமானால் வேறு தொகுதியில் போட்டியிடுகிறேன். மஜததொண்டர்கள் என்னை துமக்கூருவில் போட்டியிடுமாறு வலியுறுத்தி வருகின்றனர். விரைவில் அங்கு சென்று தேர்தல் பணியை தொடங்க இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல தேவகவுடா தனதுமற்றொரு மகனும், கர்நாடக முதல்வருமான குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியை மைசூரு அல்லது மண்டியாவில் நிறுத்த முடிவெடுத்துள்ளார். நிகில் குமாரசாமி கூறும்போது,“எனது தாத்தாவும், தந்தையும் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன். மைசூரு, மண்டியா ஆகிய இரு தொகுதிகளிலும் எங்கள் மஜதவுக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. எனவே நான் வெற்றி பெறுவது உறுதி” என்றார்.

தேவகவுடாவின் இரு பேரன்களும் களமிறங்க முடிவெடுத்துள்ள தொகுதிகளில் மஜதவினர் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். குமாரசாமி, ரேவண்ணா ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் பகுதி வாரியாக மக்களை சந்தித்து, வாக்குசேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக அரசியலில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தந்தை, மகன், மருமகள் என கட்சியிலும், ஆட்சியிலும் வாரிசு அரசியலில் ஈடுபட்டு வந்த தேவகவுடா இப்போது பேரன்களை களமிறக்குவதன் மூலம் புதிய உச்சத்தை தொடுகிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close