[X] Close

பிறந்த குழந்தைக்கு அபிநந்தனின் பெயரைச் சூட்டிய ராஜஸ்தான் தம்பதி


  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 02 Mar, 2019 18:12 pm
  • அ+ அ-

விமானி அபிநந்தனின் விடுதலையான நேற்று (வெள்ளிக்கிழமை) பிறந்த ஆண் குழந்தைக்கு அபிநந்தனின் பெயரை வைத்து ராஜஸ்தான் தம்பதியினர் மகிழ்ந்துள்ளனர். அவர்களுக்கு பாராட்டு குவிந்துவருகிறது.

 

பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் பஞ்சாப் மாநிலம், வாகா-அட்டாரி எல்லை வழியாக நேற்றிரவு நாடு திரும்பினார்.  விமானப்படையின் உயரதி காரிகளான ஏர் வைஸ் மார்ஷல்கள் பிரபாகரன், ரவி கபூர் ஆகியோர் அபிநந்தனை வரவேற்றனர். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

அட்டாரி எல்லைக்கு அபிநந்தன் வந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் ஆரவாரம் செய்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது விடுதலையைக் காலை முதலே பொதுமக்கள் ஆடல், பாடலுடன் கொண்டாடினர். இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். அவரது புகைப்படத்துக்கு பாலாபிஷேகமும் செய்தனர்.

 

பாகிஸ்தானில் இருக்கும்போது அவரின் வீடியோ  வெளியானது. அதில் துணிச்சலுடனும் தைரியத்துடனும் அவர் பேசியது இந்தியா முழுவதும் பேசுபொருளானது. இந்திய மக்கள் மத்தியில் ஒரு ஹீரோவாகவே பார்க்கப்பட்டார் அபிநந்தன்.

 

இந்நிலையில், ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள கிஷான்கர் பகுதியில் நேற்று மாலை பிறந்த குழந்தைக்கு அபிநந்தனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து குழந்தையின் தாத்தா ஜனேஷ் பூட்டானி, ''நேற்று மாலை என்னுடைய மருமகள் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தைக்கு விமானி அபிநந்தனைக் கவுரவப்படுத்தும் விதமாக அவரின் பெயரை வைத்துள்ளோம். அபிநந்தனை எண்ணிப் பெருமை கொள்கிறோம்.

 

அபிநந்தனை விடுதலை செய்வது தொடர்பான பணிகள் நடந்துகொண்டிருந்தபோது வீட்டில் அனைவரும் செய்தி சேனல்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது என் மருமகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது'' என்றார்.

 

குழந்தையின் தாய் சப்னா தேவி பேசும்போது, ''அபிநந்தன் என்று என்னுடைய மகனை அழைக்கும்போதெல்லாம், விமானி அபிநந்தனின் வீரச் செயல்களைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டே இருப்போம். என் மகன் வளர்ந்து பெரியவனாகும்போது, அவரைப் போன்ற துணிச்சல் மிக்க வீரனாக மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்'' என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close