[X] Close

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்ததில் 6 பேர் பலி; காயம் 31


6-31

  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 02 Mar, 2019 13:17 pm
  • அ+ அ-

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் பகுதியில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, தன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில் 6 பேர் பலியாகினர். 31 பேர் காயமடைந்தனர்.

சுரின்சர் பகுதியில் உள்ள சந்தே கிராமத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்த தகவலின்படி, ''நேற்று நள்ளிரவு தனியார் பேருந்து ஒன்று ஜம்முவில் சென்றுகொண்டிருந்தது.

மழை மற்றும் பனியால் ஏற்பட்ட மலைச்சரிவின் காரணமாக கடந்த 5 நாட்களாக ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நள்ளிரவில் சாலை பயணத்துக்காகத் திறக்கப்பட்ட நிலையில், போக்குவரத்து காவலர்கள் விதிமுறைகளைக் கடைபிடிக்க அறிவுறுத்தி இருந்தனர். அவர்களிடம் இருந்து விலகி, விரைவாகச் செல்ல ஓட்டுநர் உள்ளடங்கிய பாதையைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சந்தே கிராமத்துக்கு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்தாக்கில் புகுந்தது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 32 பேர் காயமடைந்தனர்.

மீட்புப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டன. காயமடைந்தவர்கள் அனைவரும் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ஒருவர் உயிரிழந்தார். சிகிச்சை பெறுபவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close