[X] Close
 

காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார் தொகாடியா: புதிய அமைப்பை தொடங்கவும் திட்டம்


togadia-begins-indefinite-fast

  • நெல்லை ஜனா
  • Posted: 17 Apr, 2018 16:14 pm
  • அ+ அ-

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி பிரவீன் தொகாடியா இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.

விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பதவிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் அந்த அமைப்பின் மூத்த தலைவரான பிரவீன் தொகாடியா ஆதரவு பெற்ற வேட்பாளர் ராகவ ரெட்டி தோல்வி அடைந்தார். புதிய தலைவராக கோக்ஜே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்தலில் முறைகேடு நடந்ததாகவும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு இந்துக்களுக்கு துரோகம் செய்வதாகவும் குற்றம்சாட்டிய தொகாடியா, அந்த அமைப்பில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். அதிகாரத்தில் இருப்பவர்கள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதையும் மக்களுக்கு அளித்த வாக்குறுதியையும் மறந்துவிட்டனர் என்றும் பாஜகவை மறைமுகமாக தாக்கினார்.

இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை ரத்து செய்வது, பொது சிவில் சட்டம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி அகமதாபாத்தில் பிரவீன் தொகாடியா இன்றுமுதல் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.

அகமதாபாத்தில் பால்டி பகுதியில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் அலுவலகம் உள்ள பகுதியில் அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருடன் இந்து சன்னியாசிகள் சிலரும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக ஜிஎம்டிசி மைதானத்தில் அவர் உண்ணாவிரதம் இருக்க முற்பட்டார், ஆனால் அதற்கு போலீஸார் அனுமதி மறுத்து விட்டனர். புதிய அமைப்பு ஒன்றை தொடங்கவும் பிரவீண் தொகாடியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரவீண் தொகாடியவும், பிரதமர் மோடியும் தொடக்க காலத்தில் ஆர்எஸ்எஸ்சில் ஒன்றாக சேர்ந்து பணியாற்றியவர்கள். பின்னர் தொகாடியா விஸ்வ இந்து பரிஷத்துக்கு சென்று அதன் தலைவராக பதவி வகித்தார். பாஜகவுக்கு சென்ற மோடி பிரதமரானார். மோடி பிரதமர் பதவி ஏற்றது முதலே தொகாடியா பாஜக மீது குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். சமீபத்தில் திடீரென தலைமறைவான தொகாடியா தன்னை ராஜஸ்தான் போலீஸார் என்கவுன்டர் செய்ய திட்டுமிட்டுள்ளதாக புகார் கூறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

 




Kalathin Vasanai - Kindle Edition


[X] Close