[X] Close
 

சர்ச்சை பேராசிரியையிடம் விடிய விடிய விசாரணை நடத்திய போலீஸார்


professor-nirmala-devi

  • பாரதி
  • Posted: 17 Apr, 2018 13:46 pm
  • அ+ அ-

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தும் விதமாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியிடம் நேற்று இரவு 2 மணி வரை விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய வகையில் செல்போனில் பேசியதாக வந்த புகாரையடுத்து கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி (46) நேற்று மாலை (திங்கள்) கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.

2 மணி வரை விசாரணை..
இந்நிலையில், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட நிர்மலா தேவியிடம் எஸ்.பி., ராஜராஜன், ஏடிஎஸ்பி மதி, டிஎஸ்பி தனபால், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்.ஐ., மயில் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டனர்.
மீண்டும் காலையிலும் விசாரணை தொடர்ந்தது. கல்லூரி தரப்பிலிருந்து முதல்வர் பாண்டியராஜன் காவல்நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணை முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
நிர்மலாதேவியிடம் இருந்து போலீஸார் 3 செல்ஃபோன்களை பறிமுதல் செய்துள்ளனர். இன்று பிற்பகல் 2 மணியளவில் எஸ்.பி. ராஜராஜன் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.

விசாரணை ஆணையமே கண்துடைப்பு..
இதற்கிடையில் நிர்மலா தேவி சர்ச்சை தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த ஜனநாயக மாதர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் பூங்கோதை, நிர்மலா மீதான வழக்கும் கண்துடைப்பு. அவர் மீதான விசாரணை ஆணையமும் கண்துடைப்பு என்றார்.
விசாரணை திருப்திகரமாக இல்லை எனவும், விசாரணைக் குழுவில் நடுநிலையாளர்கள், சமூக ஆர்வலர்கள் தன்னைப் போன்ற ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்தவர்களையும் உறுப்பினர்களாக சேர்த்திருக்க வேண்டும் என்றார்.
நிர்மலாவின் வேலை வேலியே பயிரை மேய்ந்த கதையாக இருக்கிறது எனக் கூறிய அவர் அவருக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது. அவ்வாறு ஜாமீன் கொடுத்தால் அவர் வெளியே வந்து சாட்சியைக் கலைக்க வாய்ப்புள்ளது என்றார்.

தொடர்புடைய செய்திகள்




Kalathin Vasanai - Kindle Edition


[X] Close