[X] Close

ஏடிஎம்களில் பணம் இல்லை: கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திராவில் மக்கள் பரிதவிப்பு


cash-crunch-reported-at-atms-in-many-states

படங்கள் ஏஎன்ஐ

  • பாரதி ஆனந்த்
  • Posted: 17 Apr, 2018 12:19 pm
  • அ+ அ-

கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பல ஏடிஎம் மையங்களிலும் பணம் இல்லை என பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். தமிழகத்திலும் ஆங்காங்கே இந்தப் புகார் எழுந்துவருகிறது.

கடந்த 2016 நவம்பரில் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பின்னர் இருந்த நெருக்கடி இப்போது மீண்டும் வந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். பொதுத் துறை வங்கிகள் பல நிதி சிக்கலில் இருப்பதாலேயே இது நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், முன்பெல்லாம் அன்றாடம் ஏடிஎம் மெஷின்களில் ஒரு நபர் சராசரியாக எடுக்கும் பணம் ரூ.3000 ஆக இருந்தது. அதுவே தற்போது ரூ.5000 ஆகிவிட்டது என வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் டெபாசிட் ஆகும் தொகையைவிட ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து எடுக்கப்படும் தொகை அதிகமாக இருப்பதால், டிமான்ட் சப்ளையில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும். அதன் காரணமாகவே சில மாநிலங்களில் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லாதிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலுவான நிதி நிலைமையுடன் உள்ள பொதுத்துறை வங்கிகள் மற்ற பொதுத்துறை வங்கிகளுக்கு நிதியுதவி அளித்து உதவலாம் என நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ரூ.200 நோட்டு அதிகமாக புழக்கத்தில் உள்ள நிலையில் அதற்கேற்றவாறு ஏடிஎம் இயந்திரங்களின் வடிவமைப்பை சீர் செய்யுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நிதித் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பணத் தட்டுப்பாடை சமாளிக்க நடிவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close