[X] Close
 

பலாத்காரர்களிடம் பேரம் பேசிய பெற்றோர்; பாதிக்கப்பட 16 வயது சிறுமி போலீஸில் திடுக் தகவல்


delhi-teen-alleges-parents-took-5-lakhs-from-rape-accused

  • பாரதி
  • Posted: 17 Apr, 2018 11:51 am
  • அ+ அ-

பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான சிறுமி ஒருவரின் பெற்றோரே பலாத்கார வழக்கை வாபஸ் பெறுவதற்காக குற்றவாளிகளிடம் பேரம் பேசி ரூ.5 லட்சம் முன் பணம் பெற்ற திடுக்கிடும் சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

காஷ்மீர் சிறுமிக்கு நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என நாடு முழுவதும் குரல் எழும்பி வரும் நிலையில், டெல்லியில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரே வழக்கை வாபஸ் பெற முன் பணம் பெற்றிருக்கின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 16 வயது சிறுமி ஒருவர் மாயமானார். அவர் காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் போலீஸில் புகார் கூறினர். ஒரு வாரத்தில் அப்பெண் தானாகவே வீடு திரும்பினார். தன்னை இரண்டு பேர் அடைத்துவைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறினார். இது தொடர்பாக போலீஸார் இருவரைக் கைது செய்தனர்.

இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பிலிருந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரைச் சந்தித்தவர்கள் நீதிமன்றத்தில் பிறழ் சாட்சி சொல்வதற்காக ரூ.5 லட்சம் முன் பணமாக பெற்றுள்ளனர்.
இதை பாதிக்கப்பட்ட பெண்ணே போலீஸில் அம்பலப்படுத்தினார். 
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்,  "ஒரு நாள் என் வீட்டுக்கு குற்றவாளிகளுக்கு நெருங்கிய சிலர் வந்தனர். என் பெற்றோரிடம் வழக்கை வாபஸ் பெறுமாறு கூறினர். முதலில் என் பெற்றோர் அதை ஏற்கவில்லை. ஆனால், அவர்கள் ஆளுக்கு ரூ.10 லட்சம் தருவதாகவும் ரூ.5 லட்சத்தை முன்பணமாக வைத்துக் கொள்ளுமாறும் கூறினர்.

எனது பெற்றோரும் ரூ.5 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டனர். நான் இவ்வளவு தூரம் பாதிக்கப்பட்ட பின்னரும் எனக்கெதிராக என் பெற்றோரே செயல்பட்டது எனக்கு அதிர்ச்சி அளித்தது. அந்தப் பணத்துடனேயே நான் போலீஸில் புகார் அளித்தேன். தற்போது போலீஸார் என் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்" என்றார்.

தொடர்புடைய செய்திகள்




Kalathin Vasanai - Kindle Edition


[X] Close