[X] Close

காஷ்மீர் சிறுமிக்காக சென்னையில் இரங்கல் கூட்டம் நடத்திய ‘சென்னை தோஸ்த்’


kashmir-asifa-case

  • பாரதி ஆனந்த்
  • Posted: 16 Apr, 2018 15:15 pm
  • அ+ அ-

காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டு கோயிலில் அடைக்கப்பட்ட பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.

ஒரு கும்பலே இந்த வன்முறையில் ஈடுபட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் எதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், சென்னை திருவான்மியூர் கடற்கரையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரங்கல் மற்றும் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. சென்னை தோஸ்த் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த விழிப்புணர்வுக் கூட்டத்தை நடத்தியது.

எல்.ஜி.பி.டி மற்றும் சென்னை தோஸ்த் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து இந்த மவுன ஊர்வலத்தை நடத்தின. அத்துடன் பாலியல் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் பலாத்கார வழக்குகள் 85% அதிகரித்துள்ளன என்ற புள்ளிவிவரம் வெளியிடப்பட்டது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை மற்றும் பலாத்காரம் ஆகியவற்றில் 20,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆய்வின்படி, இந்தியாவில் ஒவ்வொரு 4 மணிநேரமும் ஒரு குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறது. இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு எதிராகக் குரல்களை எழுப்ப எல்.ஜி.பி.டி மற்றும் சென்னை தோஸ்த் உறுப்பினர்கள் பங்குபெற்றனர். மேலும் அவர்கள் சந்திப்பில் குழந்தை துஷ்பிரயோகத்தின் மோசமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close