[X] Close

பாலகோட் தாக்குதல்:  'மிராஜ் சிங்' என விமானத்தின் பெயரை குழந்தைக்கு வைத்த தம்பதி


child-born-during-iaf-s-air-strike-in-pakistan-named-mirage-singh-by-parents

  • போத்திராஜ்
  • Posted: 27 Feb, 2019 13:51 pm
  • அ+ அ-

ஜெய்ப்பூர்,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தித் திரும்பியதை பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களும் கொண்டாடி வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரில், புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு நாடுமுழுவதும் பெரும் எதிர்ப்பலை நிலவியது. இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பாலகோட் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம் மீது நேற்று இந்திய விமானப்படை பதிலடித் தாக்குதல் நடத்தியது. இதில் 350-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. இந்த தாக்குதலில் இந்தியாவின் மிராஜ்-2000 ரக போர்விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

இந்திய விமானப்படையின் வெற்றிகரமான தாக்குதலைத் தொடர்ந்து, டெல்லியைச் சேர்ந்த ஆட்டோ  ஓட்டுநர் மனோஜ் என்பவர், நேற்று ஒருநாள் மட்டும் பயணிகளிடம் பணம் பெறாமல் இலவசமாக அழைத்துச் சென்றார்.

மேலும், ராஜ்கோட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச் சேர்ந்த வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் உணவு, இனிப்புகள், சேவைகளை மக்களுக்கு இலவசமாக வழங்கினார்கள்.

இதில் மிகமுக்கியமாக, ராஜஸ்தான் மாநிலம் நவ்கவுர் மாவட்டம், தாப்தா கிராமத்தைச் சேர்ந்த மகாவிர் சிங், சோனம் சிங் தம்பதி தங்களின் குழந்தைக்கு மிராஜ் சிங் ரத்தோர் என பெயரிட்டுள்ளனர். பாலகோட் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் மீது குண்டு வீசி மிராஜ்2000 விமானங்கள் வீழ்த்தின. இதை நினைவு கூறவும், பெருமைப்படுத்தவும் மிராஜ் சிங் ரத்தோர் என பெயரிட்டனர்.

அதிலும் பாலகோட்டில் மிராட் விமானம் தாக்குதல் நடத்திய அதிகாலை 3.50 மணிக்கு அந்த குழந்தை பிறந்தது. தாக்குதல் நடத்திய நேரத்தில் அந்த குழந்தை பிறந்ததால் விமானத்தின் பெயரான மிராஜ் சிங் ரத்தோர் என வைத்துவிட்டனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close