[X] Close

வங்கிகளின் சிஇஓ சம்பளம் கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கி முடிவு


reserve-bank

  • kamadenu
  • Posted: 27 Feb, 2019 10:52 am
  • அ+ அ-

தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் உயர் பதவியில் உள்ளவர்களுக்கு அதிக ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்குவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதன்படி அவர்கள் பெறும் சலுகைகளில் 50 சதவீதம் வரை குறைக்கப்படும் என தெரிகிறது.

வங்கிகளின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ), முழு நேர இயக்குநர்கள் மற்றும் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களின் மாற்றத்தக்க ஊதியமானது அவர்களது அடிப்படை சம்பள தொகையை விட 200 சதவீதம் அதிகமாக இருக்கக்கூடாது. முன்னர் இது 70 சதவீதமாக இருந்தது. ஆனால் அவர்களுக்கு வங்கி பங்குகள் வழங்குவதில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமலிருந்தது.

அதிக ஊதியம் பெறும் பதவியில் உள்ளவர்களின் நடவடிக்கைகள் கண்காணிப்பதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளுக்கான கட்டுப்பாடுகளை 7 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ரிசர்வ் வங்கி வகுத்து அதை செயல்படுத்த உள்ளது. 2012-ம் ஆண்டு வெளியான வழிகாட்டுதல்கள் மறு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல வங்கியின் நிதி நிலை ஸ்திரமாக உள்ளதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிஇஓ தவிர வங்கிகளின் இயக்குநர் குழுவின் முழு நேர இயக்குநர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் மற்றும் இதர படிகள் உள்ளிட்டவற்றுக்கும் வரம்பு நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வங்கிகளின் பங்குகள் அளிக்கப்பட்டால் அதுவும் மாறுதலுக்குட்பட்ட ஊதியத்தில் சேர்க்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

புதிய வழிகாட்டுதலின்படி மாறுதலுக்குள்பட்ட ஊதிய விகத்தில் 50 சதவீதம் பணம் அல்லாததாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள இந்த வழிகாட்டுதல் குறித்த கருத்துகளை மார்ச் 31-ம் தேதி வரை தெரிவிக்கலாம். 2008-ம் ஆண்டில் சர்வதேச அளவில் நிதித் துறையில் ஏற்பட்ட மிகப் பெரிய நெருக்கடிக்கு வங்கிகள், நிதி நிறுவனங்களில் உயர் பதவியிலிருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் மற்றும் பிற சலுகைகளும் காரணம். அவர்கள் பெற்ற சலுகைகளுக்கேற்ப பொறுப்புடன் நடந்து கொள்ளாததால் நிதி நெருக்கடி ஏற்பட்டது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close