[X] Close

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி: ''வலிமை சூழ இருப்போம்''- இந்திய ராணுவத்தின் கவிதை


  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 26 Feb, 2019 13:34 pm
  • அ+ அ-

வலிமை சூழ்ந்தவர்களாக இருப்போம் என்ற பொருள்படும் ரீதியில் இந்திய ராணுவம் கவிதை ஒன்றை, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாலாகோட் தீவிரவாத முகாம் மீது இந்தியா தரப்பில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்திய மிராஜ் வகைப் போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  இன்று (செவ்வாய்க்கிழமை)  அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தின. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன. இதில் பாலாகோட், சக்கோத்தி மற்றும் முஸாஃபராபாத்தில் இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் பதில் தாக்குதலை அரசியல் தலைவர்கள்,திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலதரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் வலிமை சூழ்ந்தவர்களாக  இருப்போம் என்று பொருள்படும் ரீதியில் இந்திய ராணுவம் கவிதை ஒன்றை, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

எதிரிக்கு முன்னால்

அமைதியாகவும் கீழ்படிகிறவர்களாகவும்

நீங்கள் இருந்தால்,

உங்களைக் கோழை என்றே

எதிரிகள் கருதுவார்கள்.

பாண்டவர்களைக்

கெளரவர்கள் நடத்தியதுபோல.

வலிமையான இடத்திலும்

வெற்றி பெறும் நிலையிலும்

இருந்தால் மட்டுமே,

உங்களால்

அமைதியைப் பற்றிப் பேசமுடியும்.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திக் கவிஞர் ராம்தாரி சிங் எழுதிய இக்கவிதையை இந்திய ராணுவத்தின் மக்கள் தொடர்புத்துறை கூடுதல் தலைமை இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close