[X] Close

சேமிப்பு திட்டங்களுக்கான புதிய சட்டம்; முறைப்படுத்தப்பட்ட நிதி திட்டங்களுக்கு சிக்கல் இல்லை: நிதி சேவைகள் துறை விளக்கம்


money

  • kamadenu
  • Posted: 25 Feb, 2019 10:14 am
  • அ+ அ-

முறைப்படுத்தப்படாத சேமிப்பு திட்டங்களைத் தடை செய்யும் அவசர சட்டத்தினால் முறைப்படுத்தப்பட்ட நிதி திட்டங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என நிதி சேவைகள் துறை விளக்கம் அளித்துள்ளது.

பொதுமக்களிடம் நிதித் திரட்டும் திட்டங்கள் தொடர்பாக சமீபத்தில் அவசர சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று இது நிறைவேற் றப்பட்டது. இந்தச் சட்டம் சிட் பண்டுகள் உள்ளிட்ட அனைத்துசேமிப்பு திட்டங்கள் மீதும் செயல்படுமா என்பது குறித்து பலருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து நிதி சேவைகள் துறை விளக்கம் அளித்துள்ளது. தனிநபர்கள், நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்துவிதமான முறைப்படுத்தப்படாத நிதி திரட்டல் திட்டங்கள் மீது இந்தச் சட்டம் தடை விதித்துள்ளது.

அதாவது இந்தச் சட்டம் போலி நிதித் திட்டங்களையும், நிதி நிறுவனங்களையும் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளது. தவிர, முறைப்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்கள், தனிநபர்கள் நிதித்திரட்டுவதில் எந்தத் தடையும் இல்லை. எனவே அங்கீகாரம் பெற்ற சிட் பண்டுகள், நிதி நிறுவனங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close