[X] Close

கட்டுமானத்தில் உள்ள, மலிவு விலை வீடுகளுக்கான ஜிஎஸ்டி 7% குறைப்பு: அருண் ஜேட்லி அறிவிப்பு


gst-on-under-construction-flats-affordable-housing-slashed-by-7

  • முத்துக்குமார்
  • Posted: 24 Feb, 2019 19:53 pm
  • அ+ அ-

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டில்லியில், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், மலிவு விலை வீடுகளுக்கான ஜிஎஸ்டி 8 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாகவும், கட்டுமானத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டது.

இது வரும் ஏப்., 1 முதல் அமலுக்கு வர உள்ளது.ரூ.45 லட்சம் வரையில் வாங்கப்படும் வீடுகள் மலிவு விலை வீடுகளாகும். அதாவது மெட்ரோ நகரங்களில் 60 சதுரமீட்டர் கொண்டதும் மெட்ரோக்கள் அல்லாத நகரங்களில் 90 சதுர மீ பரப்பில் கட்டப்படும் வீடுகளுக்கு இது பொருந்தும். 

தற்போது கட்டுமானத்தில் உள்ள வீடுகளுக்கான ஜிஎஸ்டி 12% ஆக இருந்து வருகிறது, இது வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.  அதாவது விற்கப்படும்போது கட்டுமானம் நிறைவுபெற்றது என்ற சான்றிதழ் வழங்கப்படாத வீடுகள், கட்டிடங்களுக்கான ஜிஎஸ்டி தற்போது 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 

ஆனால் கட்டுமான உரிமையாளர்கள் இந்தப் புதிய ஜிஎஸ்டி முறையின் படி இன்புட் வரிக் கடன் கோர முடியாது. 

“இந்த ஜிஎஸ்டி  குறைப்பு நிச்சயம் கட்டுமானத்துறையின் வளர்ச்சிக்கு உதவும்” என்று அருண் ஜேட்லி தெரிவித்தார். லாட்டரி சீட்டுகளுக்கான ஜிஎஸ்டி குறைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மேலும் 380 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ளது. 

தற்போது மாநில லாட்டரிகளுக்கு 12 ஜிஎஸ்டி வரியும் மாநிலம் அதிகாரம் வழங்கிய லாட்டரிகளுக்கு 28% ஜிஎஸ்டியும் இருந்து வருகிறது. 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close