இந்திய ராணுவ வீரரை கொன்ற 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 ராணுவ வீரர்கள், 1 சிறப்பு காவல்படை வீரர் படுகாயமடைந்தனர். சிஆர்பிஎப் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ஜம்மு கூடுதல் டிஜிபி ஆனந்த் ஜெயின் கூறியதாவது: சத்தர்கலா பகுதியில் உள்ள ஆயுதப்படை வீரர்களின் ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும்காவல்துறையினரின் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நேற்று முன்தினம் இரவு தீவிரவாதிகள் ஊடுருவினர். தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் இரவோடு இரவாகக் சுட்டுக் கொல்லப்பட்டார். அதிபயங்கர ஆயுதங்கள் ஏந்தி தாக்குதல் நடத்திய மற்றொரு தீவிர வாதிக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் துப்பாக்கிச்சூடு இரவு முழுவதும் நடைபெற்றது. பின்னர்நேற்று அதிகாலை அவரும்ராணுவத்தினரால் சுட்டுக்கொல் லப்பட்டார். மேலும் தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் உள்ளூரை சேர்ந்த ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இந்த தாக்குதலில் பொதுமக்களில் மூன்று பேர் உயிரிழந்த தாகவும் பலருக்கு படுகாயம் ஏற்பட்டதாகவும், சிலர் பிணைக்கைதிகளாகப் தீவிரவாதிகளால் அடைத்து வைக்கப்பட்டிருப் பதாகவும் வதந்தி பரவி வருகிறது. ஆனால், பொதுமக்களில் ஒருவருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டது. இதை தவிர வதந்திகளை நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.