[X] Close
 

ஆசிபாவுக்கான நீதி நிலைட்டாப்படும்: ஜம்மு காஷ்மீர் டிஜிபி


we-hope-justice-will-be-done-sp-vaid

  • பாரதி
  • Posted: 13 Apr, 2018 11:00 am
  • அ+ அ-

ஆசிபா கொலை வழக்கில் நீதி நிலைட்டாப்படும் என ஜம்மு காஷ்மீர் காவல்துறை டிஜிபி எஸ்.பி.வைத் தெரிவித்திருக்கிறார். காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி காணாமல் போன சிறுமி ஆசிபா 4 நாட்களுக்குப் பிறகு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தடயவியல் சோதனையில் தெரியவந்தது.

8 வயது சிறுமிக்கு நேர்ந்த இந்தக் கொடூரம் தற்போதுதான் தேசத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.

இந்நிலையில், ஆசிபா கொலை வழக்கு குறித்து ஜம்மு காஷ்மீர் மாநில டிஜிபி வைத் கூறும்போது, "இதைவிடக் கொடூரமான குற்றச்செயல் இருக்க முடியாது. சிறப்புப் புலனாய்வுக் குழு தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தற்போது ஆசிபாவுக்கான நீதி நிலைநாட்டப்படும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


[X] Close