[X] Close

புல்வாமா தாக்குதல்: பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் ரத்து- அருண் ஜேட்லி அறிவிப்பு


pulwanaattack

  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 15 Feb, 2019 11:49 am
  • அ+ அ-

புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்குக் காரணமான பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட வர்த்தகத்துக்கு உகந்த நாடு என்னும் சலுகைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

 

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்று மாலை 3 மணிக்கு புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினர் பேருந்தில் சென்றனர். அப்போது, அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, அதன் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்தார்.

 

இந்தத் தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 45  சிஆர்பிஎப் வீரர்களால் 44 பேர் கொல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை ஒரு வீரர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 38 சிஆர்பிஎப் வீரர்கள், பாதாமிபாக் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதற்கிடையே புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் 45 பேர் தீவிரவாதியால் கொல்லப்பட்டது குறித்து அவசர முடிவுகள் எடுக்கப் பாதுகாப்புத் துறைக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் கூடியது. அங்கு பிரதமருடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி.

 

அப்போது அவர், ''வர்த்தகத்துக்கு உகந்த நாடு என பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு வர்த்தக ரீதியான எந்த சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது.

 

ராணுவ வீரர்களின் மீதான தாக்குதலில் நேரடித் தொடர்புகொண்ட பாகிஸ்தான் அதை மறுக்க முடியாது. சர்வதேச அரங்கில் பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய வெளியுறவுத் துறை தொடங்கும்.

 

தாக்குதலுக்குக் காரணமாக இருந்தவர்களும், தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பவர்களும் அதற்காக மிகப்பெரிய விலையை அளிக்க வேண்டியிருக்கும்.  தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களைச் சொந்த ஊருக்கு அனுப்பும் பணி நடைபெற்றுவருகிறது'' என்று தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close