[X] Close

மக்களவை தேர்தலில் தங்கள் பலத்தை காட்ட எதிர்க்கட்சிகள் தனித்தனியாக போராட்டம்


mamata-protest

  • kamadenu
  • Posted: 14 Feb, 2019 10:31 am
  • அ+ அ-

கடந்த 2009, 2014-ம் ஆண்டுகளில் இரு மக்களவை தேர்தலிலும் மூன்றாவது அணி அமைக்க முடியாமல் போனது. எனினும், இந்தமுறை மதநல்லிணக்கக் கூட்டங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரானக் கூட்டங்களாக மாறியுள்ளன.

இவற்றை எதிர்க்கட்சிகள் அனைவரும் சேர்ந்து நடத்தாமல், தனித்தனியாக நடத்தத் துவங்கி உள்ளன. இத்துடன் அதன் தலைவர்கள் தாமே பிரதமராகும் முயற்சியில் இறங்கி இருப்பதாகவும் கருதப்படுகிறது.

இது குறித்து ’இந்து தமிழ்’ நாளேட்டிடம் காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள் கூறுகையில் ‘‘இந்தமுறை எதிர்கட்சிகளில் காங்கிரஸ் முக்கியத்துவம் பெற்றாலும் அதன் தலைமையை மற்றவர்கள் ஏற்க விரும்பவில்லை. தேர்தலுக்கு பிறகு வாய்ப்பு கிடைத்தால் அக்கட்சித் தலைவர்களே பிரதமராக திட்டமிடுகின்றனர். இதற்கு ஏதுவாக இப்போது தங்கள் தனிப்பட்ட பலத்தை காட்ட மோடி எதிர்ப்பு கூட்டம் நடத்துகின்றனர். இதன் இறுதியில் நாமும் அதுபோல் ஒரு கூட்டம் நடத்த திட்டமிட்டு வருகிறோம்’’ எனத் தெரிவித்தனர்.

மக்களவைத் தேர்தலுக்காக மூன்றாவது அணி அமைக்க முயற்சிக்கும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கு பெரிய அளவில் ஆதரவில்லை. எனவே, இந்தமுறை எதிர்கட்சிகள் பெரும்பாலான மாநிலங்களில் தனித்தே போட்டியிடும் நிலை உள்ளது. தேர்தலில் யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காமல் தேர்தலுக்கு பின் ஆட்சி அமைக்க ஒரு புதிய கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தக் கூட்டணியின் பிரதமராக தாங்களே அமரும் பொருட்டு பலத்தை காட்டும் கூட்டங்களாக எதிர்கட்சிகளின் போராட்டங்கள் அமைந்துள்ளன. இதை நடத்தும் கட்சிக்கு மற்ற எதிர்கட்சி தலைவர்களும் வந்திருந்து ஆதரவளித்து வருகின்றனர்.

இந்தவகையில், சமீபத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா நடத்திய கொல்கத்தா கூட்டம் ஒரு துவக்கமாக அமைந்தது. இதையடுத்து, தெலுங்குதேசம் கட்சி தலைவரும் ஆந்திராவின் முதல்வருமான சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தினார். இதன் மூன்றாவது கூட்டமாக நேற்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் அம்மாநில முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் நடத்தியுள்ளார். இதுபோல் மேலும் பல எதிர்க்கட்சிகளின் கூட்டங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close