[X] Close

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஜாதகம்: ராஜஸ்தான் அரசு புதிய திட்டம்


newborns-to-get-horoscopes-at-rajasthan-hospitals

  • பாரதி ஆனந்த்
  • Posted: 14 Feb, 2019 10:20 am
  • அ+ அ-

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஜாதகம் வழங்கும் திட்டத்தை ராஜஸ்தான் அரசு பரிசீலித்து வருகிறது.

ராஜஸ்தானில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 3-ம் தேதி, ராஜஸ்தான் மாநில கல்வித் துறை கூட்டத்தில் இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

இதற்காக ஜெய்ப்பூரில் உள்ள ஜத்குரு ராமாநந்தசார்யா ராஜஸ்தான் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவித்தனர். இந்தப் பல்கலைக்கழகம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகத்தைக் கணித்துத் தரும்.

ராஜஸ்தானில் தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் முன்வைத்த விஷயங்களில் சமஸ்கிருதப் படிப்பை ஊக்குவித்தலும் ஒன்றாக இருந்தது. மேலும் வேதம் சார்ந்த அறிவைப் பெருக்க வேதிக் சன்ஸ்கார் ஏவம் சிக்‌ஷா வாரியம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

தேர்தல் வாக்குறுதியைப் பின்பற்றியே பிறக்கும் குழந்தைகளுக்கு ஜாதகம் அளிக்கும் திட்டத்தை முன்மொழிவதாக அரசு கல்வித் துறை தெரிவித்திருக்கிறது.இந்தத் திட்டம் அரசு பரிசீலனைக்காக அனுப்பப்பட்டிருக்கிறது என ஜத்குரு ராமாநந்தசார்யா பல்கலைக்கழக துணை வேந்தர் அசோக் சர்மா தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தத் திட்டத்துக்கு 6 பெயர்களையும் பல்கலைக்கழகம் பரிந்துரைத்துள்ளது. அவற்றில் ஒன்று ராஜீவ்காந்தி ஜன்மாபத்ரி நாமகரண் யோஜனா (Rajiv Gandhi Janmapatri-Naamkaran Yojna).

ஒருவேளை அரசு இத்திட்டத்துக்கு இசைவு தெரிவித்தால் ஜெய்ப்பூரில் 5 அரசு மருத்துவமனைகளில் முதற்கட்டமாக அமல்படுத்தப்படும். ஜாதகம் கணித்துக் கொடுக்க கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது.

திட்டத்துக்கான வரவேற்பைப் பொறுத்து பின்னாளில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக அரசு மருத்துவமனைகளில் ரூ.51, தனியார் மருத்துவமனைகளில் ரூ.101 என்ற வீதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும். ஜாதகத்தில் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற யோசனையும் தெரிவிக்கப்படுமாம்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close