[X] Close

மக்களவைத் தேர்தலில் மஜதவுக்கு 12 தொகுதிகள் தேவை: தேவகவுடாவின் கோரிக்கையால் காங்கிரஸ் அதிர்ச்சி


in-the-lok-sabha-elections-the-majesty-needs-12-seats

தேவகவுடா - K_MURALI_KUMAR

  • kamadenu
  • Posted: 14 Feb, 2019 09:38 am
  • அ+ அ-

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மஜதவுக்கு கர்நாடகாவில் 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா கோரி வருவதால் காங்கிரஸ் அதிர்ச்சியடைந்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்கும் வகையில் காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து மஜத ஆட்சி அமைத்தது.

இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற இடைத்தேர்தலிலும் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றன.

எனவே, வரும் மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் - மஜத கூட்டணி தொடரும் என இரு கட்சி தலைவர்களும் அறிவித்தனர். இதன்படி, மக்களவைத் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகளை காங்கிரஸ், மஜத கட்சிகள் தொடங்கியுள்ளன.

இரு கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் தேவகவுடா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளை மஜதவுக்கு ஒதுக்க வேண்டும்.

பெங்களூரு, பழைய மைசூரு மண்டலம், மும்பை கர்நாடகா, ஹைதராபாத் கர்நாடகா ஆகிய பகுதிகளில் மஜதவுக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலம் முழுவதும் எங்கள் கட்சிக்கு நிறைய‌ இடங்கள் கிடைத்தன. நல்ல வாக்கு வங்கி இருப்பதால், 12 தொகுதிகளை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என அக்கட்சி தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன்.

விரைவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து இதுகுறித்து பேசுவேன் எனத் தெரிவித்தார்.

தேவகவுடா தொடர்ந்து 12 இடங்கள் கேட்டு பிடிவாதமாக இருப்பதால் கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயத்தில், மஜதவுக்கு 5 இடங்கள் மட்டுமே ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமையிடம் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் வலியுறுத்தி வருவதாகக கூறப்படுகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close