[X] Close

இன்று உலக வானொலி நாள்: பழங்கால வானொலிகளைச் சேகரித்து வைத்துள்ள கோவை இளைஞர்


antique-collectors-passion-for-old-radios

கோவை அபுதாகிர்

  • போத்திராஜ்
  • Posted: 13 Feb, 2019 10:16 am
  • அ+ அ-

இன்று உலக வானொலி நாள்.

இன்றைய இளையதலைமுறையினர் ஸ்மார்ட்போனுடன் வலம்வரும் நிலையில் வானொலியை பெரும்பாலும் விரும்புவதில்லை.

ஸ்மார்ட்போனிலேயே வானொலி அடங்கிவிடுவதால், தற்போதுள்ள நிலையில் பெரும்பாலானோர் வானொலியை மட்டும் வாங்குவதும் குறைந்துவிட்டது. ஆனால், பழங்கால வானொலிகளை கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சேகரித்து வருகிறது.

கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம் அருகே பாரதி பூங்காவில், எம்.ஏ. அபுதாகிர் என்பவர்தான் ஏறக்குறைய 160 பழங்கால வானொலிகளைச் சேகரித்து பராமரித்து வருகிறார்.

கோவையில் உள்ள கரும்புக்கடை பகுதியில் குடியிருக்கும் 42 வயது அபுதாகிர் கார்களுக்கு சீட் அமைப்பது, உள்வடிவமைப்பு பணிகளை அபுதாகிர் செய்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

கடந்த 28 ஆண்டுகளாகப் பழங்கால வானொலிகள், பல்வேறு நாடுகளின் நாணயங்கள், கரன்சிகளை சேகரித்து வைக்கும் பழக்கத்தை அபுதாகிர் கொண்டுள்ளார். பவுண்ட்ஸ், டோலா, வீசை, பல்வேறு வகையான பூட்டுகள், தொலைக்காட்சி பெட்டிகள் ஆகியவற்றையும் சேகரித்து வருகிறார்.

தன்னுடைய பழக்கம் குறித்து அபுதாகிர் கூறியதாவது:

" இன்றுள்ள இளைய தலைமுறையினருக்கு, நம்முடைய முன்னோர்கள் காலத்தில் வானொலி என்பது எந்த அளவுக்குத் தவிர்க்க முடியாத விஷயமாக இருந்தது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

என்னிடம் பழங்கால வானொலிகளான ரிஜென்டோன், ஜெனித், பிலிப்ஸ் ஆகியவை உள்ளன. இவை தவிர்த்து கடந்த 1924-ம் ஆண்டு வானொலி முதல் 1990களில் வடிவமைக்கப்பட்ட வானொலி வரை என்னிடம் இருக்கிறது.

குறிப்பாகக் கடந்த 1939-ம் ஆண்டு ஆங்கிலேய இந்திய ராணுவம் பயன்படுத்திய தேக்கு மரத்திலான வாக்கும் டியூப் ரேடியா, குறிப்பிட்ட தீவுகளில் மட்டும் பயன்படுத்தப்படும் ரேடியோக்கள் என்னிடம் இருக்கின்றன. இங்கிலாந்தின் முர்பி ரேடியா, ஜெர்மனியின் மெக்கென்ஸி ரேடியோ, சர்கியூட் அன்ட் முர்பி ரேடியோ, டாடா நெல்கோ ஆகியவை என்னிடம் இருக்கின்றன.

வெளியில் ஹோட்டல்களில் சாப்பிடாமல், திரைப்படம் பார்ப்பதை தவிர்த்து பணத்தைச் சேமித்து இந்த வானொலிகளையும், வெளிநாட்டு கரன்சிகளையும் வாங்கிப் பராமரித்து வருகிறேன். என்னுடைய இந்தப் பணிக்கு என்னுடைய மனைவியும், இரு மகன்களும் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், இப்போது நாம் பயன்படுத்தும் எடை அளவுக்கு முன் பயன்படுத்திய எடை அளவு பொருட்களையும் வைத்திருக்கிறேன். அலிகார் பூட்டுகள், திண்டுக்கல் பூட்டுகள், கோவைசெட்டிபாளையம் பூட்டுகள், போர்ச்சுகல் நாட்டு பூட்டுகளையும் சேகரித்து வைத்துள்ளேன் "

இவ்வாறு அபுதாகிர் தெரிவித்தார்.

கோவை, வி.எஸ்.பழனியப்பன்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close