[X] Close

தலித் போலீஸ் திருமண ஊர்வலத்தில் ரஜபுத் பிரிவினர் தாக்குதல்


rajasthan-dalit-marriage-procession-attacked

ராஜஸ்தான் மாநிலத்தில் தாக்குதலுக்கு ஆளான தலித் போலீஸ் மணமகன்

  • பால்நிலவன்
  • Posted: 12 Feb, 2019 12:36 pm
  • அ+ அ-

தலித் போலீஸ் பணியாளர் ஒருவரின் திருமண ஊர்வலத்தில் திடீரென ரஜபுத் சமுதாயத்தினர் புகுந்து சரமாரியாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் ராஜஸ்தானில் நடந்தது.

இதுகுறித்து காவல்துறை ஆய்வாளர் அஜித் சிங் தெரிவித்த விவரம்:

''ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை அன்று திருமண ஊர்வலம் ஒன்று நடைபெற்றது.

தலித் சமுதாயத்தைச் சேர்ந்த போலீஸ் பணியாளரின் திருமண ஊர்வலம் அது. கிராமத்தின் பிரதான சாலையில் திருமண ஊர்வலம் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ரஜபுத் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பலர் ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஊர்வலத்தில் சென்றவர்கள் அவர்களைத் தடுக்க முற்பட்டபோது கடுமையான ஆயுதங்கள் கொண்டு அவர்களை அடித்து நொறுக்கினர். இதனால் பலரும் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மணமகன் மீதும் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் செய்த மணமகன் சவாய் ராம், தன்னுடைய திருமண ஊர்வலம் துகார் கிராமத்திற்குள் நுழைந்தபோது, இத்தாக்குதல் நடைபெற்றதாகக் கூறினார்.

முக்கிய சட்டப் பிரிவுகளின்கீழ் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்துள்ளோம். தவிர, இத்தாக்குதலுக்குக் காரணமானவர்களை தேடி வருகிறோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது''.

இவ்வாறு காவல்துறை ஆய்வாளர் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close