[X] Close

மு.க.ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு


mukesh-ambani

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 10:09 am
  • அ+ அ-

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி நேரில் சந்தித்து, தனது மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி நேற்று மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். தனது மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழை தனது மனைவி நீடா அம்பானியுடன் இணைந்து அவர் ஸ்டாலினிடம் வழங்கினார். அப்போது துர்கா ஸ்டாலினும் உடனிருந்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close