[X] Close

பிரியங்காவை துர்கையாக சித்தரித்து லக்னோவில் காங்கிரஸ் தொண்டர்கள் போஸ்டர்


priyanka-gandhi-in-posters-ad-durga

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Feb, 2019 13:00 pm
  • அ+ அ-

பிரியங்கா காந்தியின் வருகையையொட்டி லக்னோவில் காங்கிரஸ் தொண்டர்கள் அவரை துர்கையாக சித்தரித்து போஸ்டர்களை ஒட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று லக்னோ வருவதை ஒட்டி ஊரையே கட்சிக் கொடிகளாலும் சுவரொட்டிகளாலும் அலங்கரித்துள்ளனர் காங்கிரஸ் தொண்டர்கள்.

பிரியங்கா காந்தியை கட்சியின் பொதுச் செயலாளராக அண்மையில் ராகுல் காந்தி அறிவித்தார். மேலும், உத்தரப் பிரதேச காங்கிரஸ் கிழக்கு மாவட்ட நிர்வாகப் பொறுப்பையும் வழங்கினார். இந்நிலையில், பிரியங்கா காந்தியின் வருகையை யொட்டி லக்னோவில் காங்கிரஸ் தொண்டர்கள் அவரை துர்கையாக சித்தரித்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.இந்த போஸ்டர் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அதன் அருகில் இந்தியில் சகோதரி பிரியங்கா காந்தி துர்கை அன்னையின் உருவம் என்று எழுதியுள்ளனர்.

முன்னதாக, தனது உ.பி. பயணம் குறித்து பிரியங்கா காந்தி, "நான் நாளை லக்னோ வருகிறேன். ஒரு புதிய அரசியலை நாம் உருவாக்குவோம். அதில் நீங்கள் எல்லோரும் பங்களிப்பீர்கள் என நம்புகிறேன். இளைஞர்கள், பெண்கள், ஒடுக்கப்பட்டவர்களின் குரல் இந்த புதிய அரசியலில் எதிரொலிக்கும். புதிய எதிர்காலத்தை உருவாக்குவோம்" என்றார்.

பிரியங்கா காந்தி வரும் 14-ம் தேதி வரை உ.பி.யில் தங்கி பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

பாஜக பதிலடி:

ஒருபுறம் காங்கிரஸ் தொண்டர்கள் பிரியங்காவை துர்கையாக சித்தரிக்க மறுபுறம் பாஜக போஸ்டர் பதிலடி கொடுத்திருக்கிறது.

பிரியங்கா புன்னைகைக்கும் போஸ்டரில் "நான் உத்தரப் பிரதேசத்தை கொள்ளையடிக்க வருகிறேன்" என்று எழுதி ஒட்டியுள்ளது.

பிரியங்கா வருகையை வைத்து காங்கிரஸ் - பாஜகவினர் இடையே போஸ்டர் யுத்தம் நடைபெறுகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close