[X] Close

பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல்: தெலங்கானாவில் மருத்துவர்கள் அலட்சியம்


scissors-in-the-stomach-of-the-woman

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 11 Feb, 2019 11:01 am
  • அ+ அ-

தெலங்கானாவில் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தபோது, அவரது வயிற்றில் கத்திரிக்கோலை மருத்துவர்கள் தவறுதலாக வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் மகேஸ்வரி (33). இவர் வயிற்று வலி காரணமாக, கடந்த ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி, ஹைதராபாத்தில் உள்ள நிம்ஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, டாக்டர் வீரப்பா தலைமையிலான 3 மருத்துவர்கள், அவருக்கு நவம்பர் 1-ம் தேதி ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர், நவம்பர் 12-ம் தேதி, மகேஸ்வரி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அவருக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்தது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 7-ம் தேதி மீண்டும் நிம்ஸ் மருத்துவமனையில் மகேஸ்வரிக்கு பரிசோதனை செய்யப்பட்டார். அப்போது, எக்ஸ்-ரேவில் அவரது வயிற்றில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்திரிக்கோல் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, நிம்ஸ் மருத்துவமனை இயக்குநர் மனோகரிடம் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக ஹைதராபாத் பஞ்சகுட்டா போலீஸார், டாக்டர்கள் வீரப்பா மாதவ், கிருஷ்ண மோகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close